Advertisment

ராயபுரம் தவிர இதர பகுதிகளில் குறைந்த கொரோனா தொற்று; நிம்மதி பெருமூச்சு விடும் சென்னை

இந்த இரண்டு மண்டலங்களில் மட்டும் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000க்கும் குறைவாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
covid19 second wave Infections decline in all Chennai zones

covid19 second wave Infections decline : சென்னையில் கொரோனா தொற்று குறைய துவங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சென்னை ராயபுரம் பகுதியை தவிர அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று குறைந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஒவ்வொரு வார முடிவிலும் கிடைக்கும் தரவுகளை ஒப்பீடு செய்து கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் 13 மண்டலங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ளதை உறுதி செய்துள்ளது சென்னை மாநகராட்சி.

Advertisment

ராயபுரத்தில் கொரோனா தொற்று வீதம் 0.7% ஆக உயர்ந்துள்ள நிலையில், அதன் அருகே இருக்கும் திரு.வி.க. நகரில் தொற்று அதிகரிப்பு விகிதம் 0% ஆக பதிவாகியுள்ளது. சென்னையின் சராசரி தொற்று விகிதம் தற்போது -5.5% ஆக உள்ளது. 15 மண்டலங்களில் 8 மண்டலங்களில் சென்னையின் சராசரி தொற்று விகிதத்திற்கும் குறைவாகவே பாதிப்புகளை கொண்டுள்ளது.

கடந்த வார ஆரம்பத்தில் 38,680 ஆக இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 24,290 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளாக கோடம்பாக்கம் (2320) முதலிடம் வகிக்கிறது. 2258 நபர்கள் அண்ணா நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 2154 நபர்களுக்கும், அடையார் மற்றும் தேனாம்பேட்டையில் முறையே 2093 மற்றும் 2076 நபர்களும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறைந்த அளவாக மணலியில் 452 நபர்களுக்கும், திருவொற்றியூர் பகுதியில் 753 நபர்களுக்கும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு மண்டலங்களில் மட்டும் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000க்கும் குறைவாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment