மத்திய, மேற்கு மாவட்டங்களில் கை கொடுக்காத ஊரடங்கு… மோசமான பாதிப்பை சந்திக்கும் கொங்கு மண்டலம்

90% தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தாலும், ஒரே தொழிற்சாலையில் பணியாற்றிய 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

covid19 second wave west central tamil nadu districts not improved : தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மே 11ம் தேதியில் இருந்து மிகக் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக மாநிலத்தின் பல இடங்களில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்றும் குறையவில்லை.

8 மேற்கு மாவட்டங்களில் மே 11ம் தேதி அன்று கொரோனா தொற்று 6000 ஆக இருந்த நிலையில் 20 நாட்களில் அந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 73% கூடுதல் தொற்றை கண்டுள்ளது இந்த பகுதிகள். கோவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை சமீபமாக குறைந்துள்ளது. மே 11ம் தேதி அன்று மொத்த வழக்குகளில் கோவையின் பங்கு மட்டும் 45% ஆக இருந்த நிலையில் தற்போது அது 34% ஆக குறைந்துள்ளது.

சேலம், திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மே 11ம் தேதி அன்று முறையே 925 மற்றும் 584 வழக்குகள் பதிவான நிலையில் ஜூன் 1 அன்று 1,338 மற்றும் 1653 வழக்குகள் பதிவாகியுள்ளது. 10% -ல் இருந்து 14% ஆக திருப்பூரின் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீலகிரியில் 6% ஆக தொற்று அதிகரித்துள்ளது. நாமக்கலில் 10% ஆக தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஊரடங்கிற்கு முற்றுபுள்ளி வைக்க மக்கள் ஆதரவு தேவை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த பகுதிகளில் மாநிலத்தின் பல்வேறு முக்கிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தொழிற்சாலை பணியாளர்களிடம் தொற்று எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. 90% தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தாலும், ஒரே தொழிற்சாலையில் பணியாற்றிய 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே 11 மற்றும் 31 தேதிகளுக்கு இடையேயான நாட்களில் கொரோனா தொற்று மத்திய மண்டலங்களில் 67% அதிகரித்துள்ளது. ஊரடங்கு காலத்திற்கு முன்பு இருந்த நடமாட்டத்தின் காரணமாக இந்த தொற்று அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கொரோனா சோதனையை அதிகப்படுத்தியிருப்பதன் விளைவால் கூட கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் ஆனால் தொற்று குறைய துவங்கியுள்ளது என்று திருச்சி இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் மருத்துவர் பி. ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

தொற்று குறைய துவங்கியிருந்தாலும் நேர்மறை விகிதம் 23 மாவட்டங்களில் மாநில சராசரியைக் காட்டிலும் கூடுதலாகவே உள்ளது. கோவையில் கடந்த வாரம் நேர்மறை விகிதம் 30.5% ஆக இருந்தது. தற்போது 36.6% ஆக அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid19 second wave west central tamil nadu districts not improved even after strict lockdown

Next Story
Tamil News Highlights : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 25,317 பேருக்கு கொரோனா உறுதி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com