/tamil-ie/media/media_files/uploads/2023/04/ded.jpg)
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள வடக்கு தெருவைச சேர்ந்தவர் ராஜீவ் காந்தி விவசாய கூலித் தொழிலாளி. இவர் நாலு பசு மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் இரவு வரை திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது.
இந்த இடி மின்னலில் லால்குடி அருகே குமுளூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி என்பவரது வீட்டின் அருகே கட்டி இருந்த பசு மாடுகள் மீது இடி விழுந்ததில் நான்கு பசு மாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இந்நிலையில் இடி அருகில் உள்ள தென்னை மரத்தில் விழுந்து தென்னை மரம் தீப்பற்றி எரிந்ததில் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற விவசாயிக்கு சொந்தமான 3 ஏக்கர் வைக்கோல் போரும் தீயில் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் இருக்க தீயை அணைத்தனர்.
இது குறித்து இருவரும் சிறுகனூர் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் இயற்கை விபத்து என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.