பசுமாட்டை தொலைத்து பரிதவிக்கும் கேப்டன்... துயரத்தில் விஜயகாந்த் குடும்பம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cow missing in vijayakanth house, விஜயகாந்த்

cow missing in vijayakanth house, விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் புதிதாக கட்டி வரும் வீட்டில் இருந்து இரண்டு பசு மாடுகள் மாயமாகியுள்ளன. இது குறித்து பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதற்கிடையே சென்னை காட்டுப்பாக்கத்தில் அவர் புதிதாக வீடு ஒன்றை அவர் கட்டி வருகிறார்.

கேப்டன் விஜயகாந்த் வீட்டில் மாயமான பசுக்கள் :

அந்த வீட்டில் செல்லப்பிராணிகளும் கால்நடைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

Advertisment
Advertisements

Vijayakanth , விஜயகாந்த்

இந்நிலையில், காட்டுப்பாக்கம் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த இரண்டு பசு மாடுகள் திடீரென மாயமாகியுள்ளன. இதுகுறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: