/indian-express-tamil/media/media_files/2025/08/18/anbumani-walking-2025-08-18-21-50-06.jpg)
Today Latest Live News Update in Tamil 18 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 18, 2025 21:48 IST
தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவே நடைபயணம் - அன்புமணி
ஓசூர் ராம்நகரில் பா.ம.க தலைவர் அன்புமணி பேச்சு: “தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவே நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். தி.மு.க ஏன் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு 1008 காரணங்கள் உள்ளன. இஸ்லாமியர்கள், பட்டியலின மக்கள், வன்னியர்களை தி.மு.க ஏமாற்றி வருகிறது” என்று கூறினார்.
- Aug 18, 2025 21:08 IST
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் ஆக. 19-ல் கடலுக்கு செல்ல தடை
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை (ஆகஸ்ட் 19) கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
- Aug 18, 2025 21:05 IST
தாம்பரத்தில் அடையாளம் தெரியாத கார் மோதியதில் ரேபிடோ பைக் ஓட்டுநர், பயணி பலி
சென்னை தாம்பரத்தில் அடையாளம் தெரியாத கார் மோதியதில் ரேபிடோ பைக் ஓட்டுநர், வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த பயணி உயிரிழந்தனர்.
- Aug 18, 2025 21:02 IST
ராணுவ வீரர்களின் நலன் காக்க 'முதல்வரின் காக்கும் கரங்கள்' திட்டம்: ஆக. 19-ல் தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்
முன்னாள் ராணுவ வீரர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றும் வகையில், 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (ஆகஸ்ட் 19, 2025) தொடங்கி வைக்கிறார்.
இந்தத் திட்டத்தின் மூலம், முன்னாள் ராணுவ வீரர்கள் 30% மானியத்துடன் ரூ.1 கோடி வரை வங்கிக் கடன் பெற வழிவகை செய்யப்படும். இதன்மூலம், அவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கி, பொருளாதார ரீதியாக வலுப்பெறுவார்கள். இந்தத் திட்டமானது, ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், அவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையிலும் தொடங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 18, 2025 20:24 IST
‘மீண்டும் வெற்றிபெறுவோம் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்’ - இ.பி.எஸ் காட்டம்
கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் இ.பி.எஸ் பேச்சு: “மீண்டும் வெற்றிபெறுவோம் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். 2026 தேர்தலில் வெற்றி பெறுவோம் அதற்கு இந்த மக்கள் கூட்டமே சாட்சி. இன்னும் பல கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும், 10% தேர்தல் வாக்குறுதியைக்கூட தி.மு.க நிறைவேற்றவில்லை” என்று கூறினார்.
- Aug 18, 2025 20:15 IST
அலாஸ்கா பேச்சுவார்த்தை குறித்துத் தெரிவித்த புதினுக்கு மோடி நன்றி; உக்ரைனில் அமைதிக்கு அழைப்பு
மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான அலாஸ்கா பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய அதிபர் புதின் தனக்கு நேரடியாகத் தெரிவித்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “எனது நண்பர் அதிபர் புதின், அலாஸ்காவில் அதிபர் டிரம்புடன் நடந்த அவரது சமீபத்திய சந்திப்பு குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி. உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வைக் காண இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, மேலும் இது தொடர்பான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கிறது. வரும் நாட்களில் நமது தொடர்ந்து தொடர்புகொள்வோம் என எதிர்பார்க்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.
- Aug 18, 2025 20:07 IST
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா பிதமர் மோடியுடன் சந்திப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்ற அவர் 18 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டார்.
- Aug 18, 2025 19:37 IST
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று (18.08.2025) இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Aug 18, 2025 18:55 IST
'கூலி' படம் உலக அளவில் 4 நாட்களில் ரூ.404+ கோடி வசூல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' படம் உலக அளவில் 4 நாட்களில் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- Aug 18, 2025 18:37 IST
20-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன், வரும் 20ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், தே.ஜ.கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அந்நிகழ்வில் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
- Aug 18, 2025 18:19 IST
இந்தியா வந்தடைந்தார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்தியா வந்தடைந்தார். இந்திய - சீன எல்லைப் பிரச்சினை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஆலோசனை நடத்த உள்ளார்.
- Aug 18, 2025 18:06 IST
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்
அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சொத்து மற்றும் முதலீடு தொடர்புடைய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ அறிவித்து உள்ளது.
- Aug 18, 2025 18:04 IST
ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேச்சு
டிரம்ப் சந்திப்பு தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேசியது தொடர்பாக பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார் புதின். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அலாஸ்காவில் டிரம்ப் புதின் பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேசிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் புதின் விளக்கம் அளித்தார்.
- Aug 18, 2025 17:43 IST
ஆக.29-ல் குரூப் 2 & 2 A தேர்வுகள்: 2-ம் கட்ட கலந்தாய்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப் II மற்றும் IIA பதவிகளுக்கான முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வை வரும் ஆகஸ்ட் 29, 2025 அன்று நடத்த உள்ளது. சென்னை, தேர்வணையர் சாலையில் உள்ள TNPSC அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறும். அழைப்புப் பட்டியல் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும். கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள அனைவரும், வருகையை ஆன்லைனில் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
- Aug 18, 2025 17:40 IST
இதயம் திறந்து கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய் கடிதம்
தமிழக கட்சி கழகத்தின் 2-வது மாநில மாநாடு 21-ம் தேதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற உள்ளது. இதையொட்டி தனது தொண்டர்களுக்கு 2-வது கடிதத்தை எழுதி இருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய். அதில் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள், உடல் நலம் குன்றியோர் மாநாட்டுக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- Aug 18, 2025 17:36 IST
சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து எல்.முருகன் வாழ்த்து
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
- Aug 18, 2025 17:25 IST
திருமாவளவன் கருத்து சரியானது இல்லை: பெ.சண்முகம் எதிர்ப்பு
தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திருமாவளவனின் கருத்து ஏற்புடையது அல்லது என்று கூறியுள்ளது. பணி நிரந்தரம் செய்யப்பாட்டால் அதில் கிடைக்கும் ஊழியம், சலுகைகளால் அடுத்த தலைமுறை முன்னேற்றம் அடையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
- Aug 18, 2025 16:40 IST
12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் சின்னம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 18, 2025 16:31 IST
ராணுவ ஆட்சி அமலில் உள்ள மியான்மரில் பொதுத்தேர்தல்
மியான்மரில் 4 ஆண்டுகளுக்கு பிறகு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மியான்மர் நாட்டின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மியான்மர் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, வரும் டிசம்பர் 28ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறத் தொடங்கும் என்றும், பல்வேறு கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 18, 2025 16:21 IST
டாஸ்மாக் வழக்கு: விசாரணை 4 வாரத்துக்கு ஒத்திவைப்பு
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை அவகாசம் கோரியதால் விசாரணையை உச்சநீதிமன்றம் 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது. டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது. வழக்கில் ஏதாவது கருத்து கூறினால் அமலாக்கத்துறைக்கு எதிராக பேசுவதாக ஒன்றிய அரசின் வழக்கறிஞர் கூறுவார், நாங்கள் எந்த அமைப்புக்கு எதிராகவும் பேசுவது இல்லை; உண்மையான தரவுகளை மட்டுமே பேசுகிறோம் என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
- Aug 18, 2025 16:06 IST
தேவநாதன் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவின் அனைத்து சொத்து விபரங்களையும் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 வார காலம் இடைக்கால ஜாமின் வழங்குமாறு அவர் தரப்பில் வாதம் முன்வைக்க, அது குறித்து வரும் 25ம் தேதி முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்தார். ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்ற காவல்துறையின் வாதத்தை ஏற்க நீதிபதி மறுத்தார்.
- Aug 18, 2025 16:04 IST
பிரதமர் மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மராட்டிய மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
- Aug 18, 2025 15:59 IST
தமிழகத்தில் 82 ரயில்வே பால பணிகள் நிலுவை – மத்திய அமைச்சர்
தமிழகத்தில் மாநில அரசு ஒப்புதல் அளிக்காததால் 82 ரயில்வே மேம்பால பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது என தி.மு.க எம்.பி. கிரிராஜன் கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் பதில் அளித்தார்
- Aug 18, 2025 15:43 IST
ராகுலுக்கு நடிகை ரம்யா முழு ஆதரவு
தேர்தல் ஆணையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு நகைச்சுவையானது. உண்மையான கேள்விகளுக்கு பதில் அளிக்காத தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் ஏன் உள்ளன என்பதற்கும், அவற்றை நீக்க என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதற்கும் விளக்கம் தர வேண்டும் என நடிகை ரம்யா கூறியுள்ளார்
- Aug 18, 2025 15:34 IST
எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு
மக்களவையில் சுபான்ஷு சுக்லாவை பாராட்டி நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்காமல், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர். கடும் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
- Aug 18, 2025 15:12 IST
ரவிச்சந்திரன் முன் ஜாமீன் கோரி வழக்கு; காவல்துறை பதிலளிக்க உத்தரவு
மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகர் ரவிச்சந்திரன் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இதற்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- Aug 18, 2025 14:57 IST
தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறது - கார்கே
தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதோடு, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துகிறது என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்
- Aug 18, 2025 14:45 IST
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வைகோ வாழ்த்து
குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ம.தி.மு.க தலைவர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்
- Aug 18, 2025 14:23 IST
கூட்டணியில் சேர்வது குறித்து இதுவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை – ஓ.பி.எஸ்
கூட்டணியில் சேர்வது குறித்து இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளதை மனதார வரவேற்கிறேன் என மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்
- Aug 18, 2025 14:21 IST
த.வெ.க கொடிக்கு எதிரான வழக்கு; ஐகோர்ட் தள்ளுபடி
சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் பச்சையப்பன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை கொடியை த.வெ.க பயன்படுத்தியுள்ளது என கூற முடியாது. இரு கொடிகளையும் ஒப்பிடும் போது, த.வெ.க. கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் என கூற முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்
- Aug 18, 2025 13:47 IST
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாட்டு எம்.பி.க்கள், கட்சி பேதமின்றி ஒருமனதாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக, தமிழ்நாட்டை சேர்ந்தவர் வருவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது; சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாட்டு எம்.பி.க்கள், கட்சி பேதமின்றி ஒருமனதாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். என்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
- Aug 18, 2025 13:28 IST
இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா?.. தேர்தல் ஆணையருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 7 கேள்விகளை எழுப்பியுள்ளார். வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?, புதிய வாக்காளர் பதிவு வழக்கத்திற்கு மாறாக குறைவாக உள்ளது; உள்ளது; இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா?, புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- Aug 18, 2025 13:12 IST
பாமக-வில் காடுவெட்டி குருவை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர் - காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை
பாமக-வில் காடுவெட்டி குருவை அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர்; ராமதாஸ் தனது மகளையும், அன்புமணி தனது மனைவியையும் அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர். பொதுப்பிரச்னைகள் பற்றி பேசாமல் இருவருக்கு இடையேயான பிரச்னையையே முதன்மை படுத்துகின்றனர்; இருவரும் நாடகமாடுகின்றனர்; தங்கள் சமுதாயத்தை முன்னேற்றும் எண்ணம் இருவருக்கும் எள்ளளவும் இல்லை என்று வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை கூறியுள்ளார்.
- Aug 18, 2025 13:10 IST
ஜெகத்ரட்சகனுக்கு எதிரான ஈ டி நோட்டீசுக்கு தடை
ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை ரூ.32.69 கோடிக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி வாங்கியதாக புகார் எழுந்தது. வாங்கிய பங்குகளை ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி தனது மனைவி பெயருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிங்கப்பூரின் சில்வர் பார்க் நிறுவன பங்குகளை வாங்கியதில் அன்னிய செலாவணி சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈ டி புகார் தெரிவித்தது. அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியது தொடர்பாக பதில் அளிக்கக் கோரி ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அமலாக்கத்துறை நோட்டீசை எதிர்த்து ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சென்னை ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்ததை அடுத்து ஜெகத்ரட்சகன் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
- Aug 18, 2025 12:53 IST
அண்ணன் ரஜினி, இன்னும் பல நூற்றாண்டு திரை உலகை ஆண்டு, தாயகப் பணி ஆற்ற வேண்டும் - நயினார் நாகேந்திரன்
"அண்ணன் ரஜினி, இன்னும் பல நூற்றாண்டு திரை உலகை ஆண்டு, தாயகப் பணி ஆற்ற வேண்டும்" என்று 50 வருடம் திரை வாழ்வை நிறைவு செய்ததற்காக நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
- Aug 18, 2025 12:22 IST
ஐ.பெரியசாமி வழக்கு: இடைக்காலத் தடை விதிப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை 2006 - 2010இல் திமுக அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2012இல் பதியப்பட்ட வழக்கில் ஐ.பெரியசாமி உள்பட அனைவரையும் விடுவித்திருந்தது விசாரணை நீதிமன்றம்
- Aug 18, 2025 12:06 IST
வரி செலுத்தாமல் இயக்கிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.4.79 லட்சம் அபராதம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், வரி செலுத்தாமல் இயக்கிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.4.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வரி செலுத்தாமல் கோவையில் இருந்து சென்னை வந்த நாகாலாந்து பதிவெண் கொண்ட பேருந்துக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
- Aug 18, 2025 12:04 IST
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? - பா.ஜ.க தலைமை முடிவு
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பாஜக-வை சேர்ந்த எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக்கிய நிலையில், தமிழரொருவருக்கு ஆளுநர் பதவி வழங்க முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
- Aug 18, 2025 11:31 IST
அடுக்குமாடி குடியிருப்பு பற்றி விளம்பரம்: கட்டுமான நிறுவனங்களுக்கு தடை
அடுக்குமாடி குடியிருப்பு பற்றி விளம்பரம் செய்யும் கட்டுமான நிறுவனங்கள் சிறப்பு வசதிகளை குறிப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் உள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் விளம்பரம் செய்ய தடை. கட்டுமான நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து ரியல் எஸ்டேட் ஆணையம் நடவடிக்கை. ஆரம்பத்தில் 20 முதல் 25 வரை இருந்த சிறப்பு வசதிகள் பட்டியல் தற்போது 150 முதல் 250 வரை நீண்டுள்ளது.
- Aug 18, 2025 11:23 IST
சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அன்புமணி வாழ்த்து
"குடியரசு துணை தலைவர் தேர்தல் போட்டிக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் சரியான தேர்வு. பா.ஜ.க மூத்த தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி, பிரதமர் மோடி உள்ளிட்டோரின் நம்பிக்கையை பெற்றவர். மாநிலங்களவையை வழிநடத்திச் செல்வதற்கான அனைத்துத் தகுதிகளும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உண்டு. குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பெருமை சேர்க்கும் வகையில் சி.பி.ராதாகிருஷ்ணன் செயல்படுவார்" என்று பா.ம.க தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- Aug 18, 2025 11:21 IST
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு அளித்தது மகிழ்ச்சி - இ.பி.எஸ்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் தரிசனம் செய்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு அளித்தது மகிழ்ச்சி. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
- Aug 18, 2025 11:03 IST
ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு - 30 நிமிடம் பேச்சு
சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை 30 நிமிடங்கள் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
சூப்பர் ஸ்டார் திரு.@rajinikanth அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்த மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்கள்#Rajinikanth50#NainarNagendranpic.twitter.com/n3k5AkHOLl
— Dr.R.Ananda Priya (@APriya_Official) August 18, 2025 - Aug 18, 2025 11:03 IST
புலி வேட்டைக்கு குறுக்கே அணில்கள் - சீமான் பரபர பேச்சு
செஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் த.வெ.க-வின் கொள்கையை பற்றி கேட்டால் தளபதி தளபதி என கத்துகின்றனர். தளபதி என கத்துவது தலைவிதி தலைவிதி என கேட்கிறது. எதற்காக வந்தாய் என கேட்டால் டி.வி.கே... டி.வி.கே என்று கத்துகின்றனர். டீ விற்கவா இவ்வளவு பேர் கிளம்பி வந்துருக்கீங்க.
புலி வேட்டைக்கு செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள். அணிலே ஓரமா போய் விளையாடு, குறுக்கே வராதே. அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன மரியாதை என்று சீமான் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
- Aug 18, 2025 10:25 IST
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும். 19ம் தேதி முற்பகல் வாக்கில் தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி கரையை கடக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
- Aug 18, 2025 09:48 IST
'கூலி' திரைப்படம் - 4 நாட்களில் ரூ.400 கோடி வசூல்
கடந்த 14ம் தேதி வெளியான கூலி திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் சுமார் ரூ.400 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Aug 18, 2025 09:46 IST
கார்கேவுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேச்சு
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசியுள்ளார். குடியரசு துணைத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு கோரும் வகையில் கார்கேவுடன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Aug 18, 2025 09:27 IST
வாக்கு திருட்டுக்காகவே சட்டம் இயற்றம்
வாக்குகளை திருடவே பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் 2023-ஆம் ஆண்டில் சட்டம் இயற்றியதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். எந்த நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையர்களுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்பது தெரியுமா? என மக்களுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
- Aug 18, 2025 09:26 IST
திருவண்ணாமலை, வேலூரில் இ.பி.எஸ் பிரச்சாரம்
திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களின் சட்டமன்ற தொகுதிகளில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். கலசபாக்கம், போளூர், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிகளில் இன்று இ.பி.எஸ் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
- Aug 18, 2025 09:00 IST
மருத்துவக் கலந்தாய்வு - இன்று இறுதிப்பட்டியல் வெளியீடு
மருத்துவப்படிப்புகளுக்கானமுதற்கட்டகலந்தாய்வின்இறுதிப்பட்டியல்இன்றுவெளியாகும்எனமருத்துவக்கல்விஇயக்ககம்அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில்ஜூலை 30 ஆம்தேதிஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்படிப்புகளுக்கானகலந்தாய்வுதொடங்கியது.
- Aug 18, 2025 08:56 IST
பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - ரூ.437 கோடியில் உள் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள சிப்காட் நிறுவனம் டெண்டர்
விருதுநகரில் பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - ரூ.437 கோடியில் உள் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள சிப்காட் நிறுவனம் டெண்டர் கோரியது. கழிவுநீர் வெளியேற்றும் பணி, தண்ணீர் விநியோகம், மழைநீர் வடிகால் கால்வாய்களுடன் கூடிய சாலைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள டெண்டர். விருதுநகர் இ.குமாரலிங்கபுரத்தில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் 1000 ஏக்கரில் இது அமைய உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.