Advertisment

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் குரல் அண்ணாமலை - ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ஆர்

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் குரல் அண்ணாமலை என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.

author-image
WebDesk
New Update
Jarkhand Governar CP Radhakrishnan, Jarkhand Governar CP Radhakrishnan praices Annamalai, Annamalairesounding voice against the ruling party in Tamil Nadu, தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் குரல் அண்ணாமலை, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ஆர் - CP Radhakrishnan, Annamalai, BJP, Tamil Nadu

ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் குரல் அண்ணாமலை என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.

Advertisment

கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனை சார்பில் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.,ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுவிழா மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 2.11 கோடி நிதி வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் நல்லா.ஜி. பழனிசாமி தங்களது நிதியிலிருந்து 2.11 கோடி தொகையை பிரதமரின் நிவாரண நிதிக்கு ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் இடம் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, அண்ணாமலை மேடையில் வாழ்த்தி பேசும் பொழுது, கொங்கு வாசனை குறையாத அன்பு அண்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன்.
100 க்கு 100 வாங்கும் வேலை திறன் உடையவர் சி.பி.ஆர். கட்சிகாக சொந்த சொத்துகளை விற்றவர் இவர். ஜார்கண்ட் இந்தியாவுக்கு முக்கிய மாநிலம்.
தமிழ்நாடு, கொங்கின் பெருமையை உயர்தியவர் சி.பி.ஆர். ஆளுநரை கவுரவப்படுத்துவது எங்கள் ஒவ்வொருவரையும் கவுரவப்படுத்துவது என பேசினார்.

இதையடுத்து, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழகத்தில் இரண்டு பேர்தான் எமனை வென்றவர்கள். ஒன்று எம்.ஜி.ஆர் ,மற்றொருவர் கே.எம்.சி.எச் நல்லா பழனிசாமி. தனது 35 வது வயதிலேயே ஐ.பி.எஸ் பணியை துறந்தவர் அண்ணாமலை. தமிழகத்தில் ஆளும் இயக்கத்திற்கு எதிராக ஓங்கி ஒழிக்கும் குரல் அண்ணாமலை. இதை அரசியலுக்காக சொல்லவில்லை. அரசியல் பேசுவதில்லை. கே.எம்.சி.எச் சார்பில் கொடுக்கப்பட்ட இரண்டு கோடியை அண்ணாமலை தனது லெட்டர்பேடில் பிரதமருக்கு நிதியை அனுப்ப வேண்டும். எதிர்ப்புகளை புரிந்து கொள்ள முடியாது. தமிழகத்தில் மீண்டும், தேவர், பெருந்தலைவர் வர வேண்டும் என்றால் அண்ணாமலை பயணம் செய்ய வேண்டும்.

அலோபதியில் கோவிட்டுக்கு மருந்து இல்லை. எண்ணற்ற ஏழை நாடுகளுக்கு முதல் முதலாக இந்தியாவிலிருந்து கோவிட்டுக்கு தடுப்பூசி அனுப்பப்பட்டது.

ஆபிரகாம் லிங்கனை உழைப்பை புகுத்தியவராக பார்கிறேன். ஆபிரகாம் லிங்கன் மனிதனை மனிதன் அடிமையாய் வைக்ககூடாது என்றவர். சோதனைகளை சந்திக்காத மனித வாழ்கையில் வியப்பு இல்லை.

வெற்றி பெறப் போகிறவர் அண்ணாமலை. வெற்றியையும், முழுப்பலனையும் தமிழகம் பார்க்க வேண்டும். அண்ணாமலை ஒரு நாள் தமிழகத்திற்கும் தலைவராக வரவேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் செய்தியாளர் சந்திப்புக்கு காத்திருந்தபோது, விழுப்புரத்தில் ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது என அண்ணாமலை தெரிவித்ததை அண்ணாமலையுடன் செய்தியாளர்கள் மத்தியில் வந்த ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன், நேற்று அண்ணாமலை ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது என தெரிவித்ததை சுட்டிக்காட்டி சிரித்தபடி சென்றார்.

செய்தி: பி. ரஹ்மான்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment