scorecardresearch

இந்தியாவிலேயே மிகவும் மாசுபட்ட ஆறு இதுதான்; மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிக்கை

இந்தியாவில் உள்ள 603 ஆறுகளில் அதிக உயிர்வேதியியல் ஆக்ஸிஜன் தேவையுடன், சென்னையில் உள்ள இந்த ஆறுதான் நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட ஆறாக மாறியுள்ளது.

CPCB report Chennai’s This river is the most polluted river in India, Cooum the most polluted river in India, இந்தியாவிலேயே மிகவும் மாசுபட்ட ஆறு இதுதான், கூவம் ஆறு, அடையாறு, மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிக்கை, Cooum River, Adyar River, CPCB

இந்தியாவில் உள்ள 603 ஆறுகளில் அதிக உயிர்வேதியியல் ஆக்ஸிஜன் தேவையுடன், சென்னையில் உள்ள கூவம் ஆறுதான் நாட்டிலேயே மிகவும் மாசுபட்ட ஆறாக மாறியுள்ளது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீபத்திய அறிக்கை, இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நதியாக சென்னையில் உள்ள கூவம் ஆற்ரை அடையாளம் கண்டுள்ளது.

நாட்டிலுள்ள 603 ஆறுகளில் காற்றின் தர அளவுகோல்படி, உயிர்வேதியியல் ஆக்சிஜன் (நச்சு வாயு) அதிகமாக இந்த ஆற்றில்தான் இருக்கிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின்படி, ‘நீர் தரத்தை மீட்டெடுப்பதற்கான மாசுபட்ட நதி நீட்சிகள், 2022’, ஆவடி முதல் சத்யா நகர் வரையிலான கூவம் கீழ்பகுதியில் உள்ள உயிர் வேதியியல் ஆக்ஸிஜன் (நச்சு வாயு) (பி.ஓ.டி) லிட்டருக்கு 345 மி.கி. யமுனா நதியில் (பி.ஓ.டி) அளவு 127 ஆக உள்ளது.

இதில், சென்னையில் உள்ள கூவம் ஆறு மட்டுமில்லாமல், அடையாறு, தமிழகத்தில் பாயும் அமராவதி, பவானி, காவிரி, பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, திருமணிமுத்தாறு மற்றும் வசிஷ்டம் போன்ற ஒன்பது ஆறுகள் அதிக மாசுபட்ட பகுதிகள் என இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. சேலத்தில் உள்ள வசிஷ்ட ஆற்றின் (பி.ஓ.டி) லிட்டருக்கு 230 மி.கி ஆகவும், அடையாறு ஆற்றில் – தாம்பரம் முதல் நந்தனம் இடையே உள்ள பகுதியில் லிட்டருக்கு 40 மி.கி ஆகவும் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Cpcb report chennais this river is the most polluted river in india