எண்ணூரில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதற்கு காரணம் சி.பி.சி.எல் நிறுவனம் தான் என்றும் அதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் பசுமை தீர்பாயத்தில் கூறியுள்ளது.
சென்னை, வெள்ளம் ஏற்பட்டுள்ள போது, கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவு மிதந்தது. அப்பகுதியில் இருக்கும் மீனவர்களின் படகுகளில் கரிய எண்ணெய் படலம் ஒட்டியது. இதனல் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தேசிய பசுமைத் தீர்பாயம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் , நீர்வள ஆதாரத்துறையின் தலைமை பொறியாளர் சென்னை மண்டலம், தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குநர், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் அடங்கிய குழு அமைத்து திங்கட்கிழமை களத்தில் ஆய்வு செய்து செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. எண்ணெய் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மக்களுக்கு தேவையான நிவாரணமும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய மாசுக்கட்டுபாட்டு வாரிய வழக்கறிஞர், சாய் சத்யஜித், “ 9ம் தேதி சி.பி.சி.எல் ஆலையிலிருந்து வடிகால் வழியாக வெளியேறிய எண்ணெய் பக்கிங்காம் கால்வாய் முதல் கழிமுகம் வரையிலான 11 கி.மீ தூரத்திற்கு எண்ணெய் பரவியிலிருந்து என வாதிட்டார்.
அப்போது தீர்பாயம் 7ம் தேதி சமர்பித்த அறிக்கையில் தெற்கு வாசலில் மட்டுமே எண்ணெய் காணப்பட்டதாக கூறினார்கள். அன்று ஆய்வு செய்யும்போது குழாய்கள், எண்ணெய் கலன்களில் கசிவு இருக்கிறதா என பார்க்கவில்லையா? என்ற கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் “ சி,பி.சி.எல் ஆலை அதிகபடியான எண்ணெய் தேக்கி வைத்ததும், மழை நீர் தேக்கி வைக்கும் குளம் போதுமானதாக இல்லாததும் முறையாக பராமரிக்காததுமே எண்ணெய் கசிவுக்கு காரணம் என்பதற்கான எல்லா ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“