Advertisment

ஆளுநர் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக உள்ளது; இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா

அரசியல் கொள்கை தளங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கு நீடிப்பதனால் தான், சமீபத்தில் பிரதமர் கம்யூனிசம் என்பது அபாயகரமான சிந்தாந்தம், அழிவை ஏற்படுத்தி விட்டு போய்விடும் என்று கூறியுள்ளார் – இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா

author-image
WebDesk
New Update
ஆளுநர் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக உள்ளது; இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா

டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட்

ஆளுநர் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக உள்ளதாகவும், ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ்., மையங்களாக மத்திய அரசு செயல்படுத்துவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கோவையில் தெரிவித்துள்ளார்.

Advertisment

கோவை மாவட்ட சி.பி.ஐ அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பா.ஜ.க.,வை சேர்ந்தவர்கள் ஆளுநராக நியமிக்கப்படுவதாகவும், ஆளுநர்கள் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளாக உள்ளதாக கூறிய அவர், ஆளுநர் என்பதற்கு பொருள் என்ன என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: ஜார்கண்ட் ஆளுனராக சி.பி ராதாகிருஷ்ணன் நியமனம்: இல. கணேசன் நாகாலாந்து ஆளுனராக மாற்றம்

தமிழக ஆளுநர் சனாதன கருத்துகள் தெரிவித்து வருவது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது. மாநிலத்திற்கு மாநிலம் வேறு கட்சிகளாக இருந்தாலும், அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிந்துக்கொண்டு பா.ஜ.க.,விற்கு எதிராக நாட்டை பாதுகாக்க மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அளவில் செயல்பட வேண்டும் என்று டி.ராஜா கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் மதசார்பற்ற கட்சி என்பது நிராகரிக்க முடியாது. கட்சிகளிடையே முரண்பாடு இருந்தாலும், அதை கடந்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.,வை வீழ்த்த ஒன்றிணைந்து நாட்டை காக்க பொதுநிலையுடன் செயல்பட வேண்டும். பா.ஜ.க ஆட்சியை பிடித்தவுடன், இடதுசாரிகள் வீழ்ந்து வருவது என்பதை நான் ஏற்கவில்லை. தேர்தல் அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறேன், அரசியல் கொள்கை தளங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கு நீடிப்பதனால் தான் சமீபத்தில் பிரதமர் கம்யூனிசம் என்பது அபாயகரமான சிந்தாந்தம், அழிவை ஏற்படுத்தி விட்டு போய்விடும் என்று கூறியுள்ளார் என டி.ராஜா குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ்., சிந்தாந்தத்திற்கு நேரெதிராக இடதுசாரிகள் சிந்தாந்தம் உள்ளதால் பா.ஜ.க.,வின் இறுதிக்கட்ட இலக்கு என்பது இடதுசாரிகளாகவே இருக்கும், ஆனால், மக்கள் மத்தியில் அரசியல் களத்தில் இடதுசாரிகள் இயக்கம் வலுவான இயக்கமாக உள்ளது என்றும் டி.ராஜா தெரிவித்தார்.

முன்னதாக டி.ராஜாவை தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவர் மத நல்லிணக்கம் தொடர்பாக தாம் செய்து சமூக பணிகள் குறித்து பேசினார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Tamilnadu Cpi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment