/indian-express-tamil/media/media_files/2025/09/26/cpi-general-secretary-d-raja-2025-09-26-07-57-19.jpeg)
CPI General Secretary D Raja
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தோழர் டி. ராஜாவுக்கு விழுப்புரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக மீண்டும் தோழர் து. ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாசிச அபாயம் பெருகிவரும் சூழலில், தோழர் து. ராஜா பொதுச்செயலாளராகத் தொடர்வது பொருத்தமானது. '75 வயதைக் கடந்தவர்கள் உயர் பொறுப்புகளை வகிக்கக் கூடாது' என்ற விதியை தளர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தோழர் ராஜாவுக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. ஒருமனதாக இந்தத் தேர்வு நடைபெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மார்க்சியத் தத்துவத்தில் தெளிவும், அன்றாட அரசியல் நிகழ்வுகளின் மீது கூர்மையான விமர்சனப் பார்வையும் ஒருங்கே கொண்ட மிகச்சிறந்த ஆளுமை தோழர் து. ராஜா ஆவார். 100 ஆண்டு கண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவரது தலைமையில் மீண்டும் வலிமையோடு எழ வேண்டும் என வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.