கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 96வது பிறந்த தினம் இன்று. இந்நாளில் அவரை நேரில் சந்தித்து பல அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கட்சிகளை கடந்தும் தன்னுடைய அமைதியான நடைமுறையால் நண்பர்கள் பலரை பெற்றிருக்கும் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பதிவு செய்தார் முக ஸ்டாலின்.
எல்லா கட்சியினருக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்குபவர் நல்லகண்ணு. வயதில் இளையவர் தான். ஆனாலும் பொதுவாழ்வில் உயர்ந்தவர் என்று கலைஞர் நல்லகண்ணுவை சுட்டிக்காட்டியதை மேற்கோள்காட்டி பேசினார் முக ஸ்டாலின்.
அதே போன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவும் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்று கொடியேற்றிய அவருக்கு திருமாவளவன், முத்தரசன், தா. பாண்டியன் உள்ளிட்ட தலைவர்களும் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil