சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தச் சிலை கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளூவர் சிலையை விட இரண்டு அடி அதிக உயரத்தில் 135-136 அடி வரை அமைக்கப்பட உள்ளது.
இந்த சிலை அமைப்பது தொடர்பான அரசியல் கருத்துகள் தமிழ்நாட்டில் வலுப்பெற்றுள்ளன. நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட இயக்கங்கள் சிலைக்கு எதிராக உள்ளன.
பொதுமக்களிடமும் சிலை வைப்பது தொடர்பாக அதிருப்தி நிலவுகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் அங்கும் வகிக்கும் முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிலை வைக்க அதிருப்தி தெரிவித்துள்ளது.
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “நிதி நெருக்கடி சூழலில் பேனா சிலை வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர், தமிழக அரசு ஏற்கனவே நிதிப் பற்றாக்குறை சூழலில் சிக்கித் தவிக்கும் நிலையில் பேனா சிலை கடலுக்குள் அவசியம்தானா? என்ற கேள்வி எழுகிறது.
எப்படி பார்த்தாலும் பேனா சின்னம் அமைத்தால் செலவு வரத்தானே செய்யும். மேலும், நினைவுச் சின்னங்கள் சர்ச்சை இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அமைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/