CPI National Executive Member C Mahendran IET Facebook Live : இந்தியா முழுவதும் கொரோனா நோய் மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பல்வேறு விமர்சனங்களும் பாராட்டுகளும் அரசின் மீது வைக்கப்படுகின்ற நிலையில் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ள வருகிறார் இடதுசாரி சிந்தனையாளர், எழுத்தாளர் மற்றும் இலக்கியவாதியான சி. மகேந்திரன்.
Advertisment
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. மத்திய மாநில அரசுகள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் அனைத்தும் சரியா? நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா? பெருங்கொள்ளை நோய்க்கு எதிரான போரில் யாருக்கு கடப்பாடுகள் அதிகம்? யாருக்கு பொறுப்புகள் அதிகம்? தன்னுடைய கருத்தையும், தன்னுடைய நிலைப்பாட்டையும், அனுபவத்தையும் இன்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. மகேந்திரன்.
Advertisment
Advertisements
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். இன்று மாலை 06:00 மணிக்கு எங்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமான https://www.facebook.com/IETamil/ - ற்கு வாருங்கள். உங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இது போன்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகள், தலைவர்களின் அறிக்கைகள், மேலும் பல முக்கியமான தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்களின் முகநூல் பக்கத்தினை ஃபாலோ செய்திடுங்கள். இன்று மாலை உங்களை சந்திக்கின்றோம் நண்பர்களே!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil