Advertisment

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் மறுப்பு: ஆளுனர் ஆர்.என் ரவிக்கு மார்க்சிஸ்ட், ம.ம.க கண்டனம்

சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் ரவி கையெழுத்திட மறுப்பு; கே.பாலகிருஷ்ணன் மற்றும் ஜவாஹிருல்லா கண்டனம்

author-image
WebDesk
New Update
sankaraiah

சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் ரவி கையெழுத்திட மறுப்பு; கே.பாலகிருஷ்ணன் மற்றும் ஜவாஹிருல்லா கண்டனம்

சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் ஆளுநர் ரவி கையெழுத்திட மறுத்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில், “என்.சங்கரய்யாவுக்கு டாக்டர்‌பட்டம் மறுப்பா? ஆளுநர் ரவிக்கு கண்டனம்… விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா, படிப்பை பாதியில் கைவிட்டு விடுதலை போராட்ட களத்திற்கு வந்த போராளி. அவர் முடிக்க முடியாத பட்டத்தை இப்போது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப் பட்டது.

தமிழ்நாடு அரசும் அதனை ஏற்று டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவித்தது. மதுரை காமராஜர் பல்கலை கழகமும் அதனை முடிவு செய்து வரும் நவம்பர் 3 அன்று நேரில் வந்து பட்டம் தருவதாக இருந்தது. ஆனால் ஆளுநர் அதற்கு கையெழுத்திட மறுத்து நிறுத்தியுள்ளார்.

விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் இப்போது என்.சங்கரய்யாவிற்கு பட்டத்தை மறுக்கிறார்கள். அவரால்தான் பட்டத்திற்கு பெருமை என்பதை உணராத கூட்டம்தான், ஆர்.எஸ்.எஸ் கூட்டம் என்பது இதன் மூலம் அம்பலப்பட்டுள்ளது.” இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை சிறையில் கழித்து, ஏழை எளிய மக்களுக்காக வாழ்நாளை அர்ப்பணித்த நூறு வயதைக் கடந்தவர் தோழர் சங்கரய்யா. தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவர் மாணவத் தலைவர், சிறந்த பொதுவுடமை சிந்தனையாளர், சிறந்த சட்டமன்ற உறுப்பினருமான என். சங்கரய்யா அவர்களின் ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக 18.08.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு (சிண்டிகேட்) கூட்டத்தில் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் 20.09.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் (செனட்) கூட்டத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கௌரவ முனைவர் பட்டயம் அல்லது சான்றிதழில் பல்கலைக்கழக வேந்தர் கையொப்பமிட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் முனைவர் பட்டம் (D.Litt) வழங்குவதற்கான அனுமதி கோரும் கோப்பு பல்கலைக்கழகத்தால் ஆளுநர்-வேந்தரிடம் சமர்ப்பிக்கப்பட்ட போது, ​​அவர் அதில் கையொப்பமிட மறுத்துள்ளார். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட உன்னத தலைவரை முனைவர் பட்ட கோப்பில் கையெழுத்திடாமல் தமிழக ஆளுநர் அவமதிப்பு செய்துள்ளார். ஆளுநர் தமது சித்தாந்த சிந்தனையை கடந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும். 02.11.2023 அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு (சிண்டிகேட்) மற்றும் ஆட்சிப் பேரவையில் (செனட்) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி என்.சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்க வேண்டும். என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜவாஹிருல்லா பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Governor Rn Ravi K Balakrishnan M H Jawahirullah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment