கரூர் துயரம்: த.வெ.க தலைவர் அங்கிருந்து சென்றதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை – பிருந்தா காரத்

கரூரில் 40க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கும் பொழுது த.வெ.க தலைவர் அங்கிருந்து சென்றுள்ளார். அதனை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை – கோவையில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் பேட்டி

கரூரில் 40க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கும் பொழுது த.வெ.க தலைவர் அங்கிருந்து சென்றுள்ளார். அதனை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை – கோவையில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் பேட்டி

author-image
WebDesk
New Update
brinda karat kovai

கோவை விமான நிலையத்தில் மேற்கு வங்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) மூத்த தலைவருமான பிருந்தா காரத் செய்தியாளர்களை சந்தித்தார். 

Advertisment

அப்போது பேசிய பிருந்தா காரத், பழனியில் நடைபெறும் மலைவாழ் மக்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்கிறேன். கரூரில் தமிழக வெற்றி கழகம் பிரச்சாரத்தின் பொழுது உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இரு தினங்களுக்கு முன்பு சி.பி.எம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். விசாரணை ஆணையத்தின் அறிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். மேலும் தமிழ்நாடு அரசால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

தமிழக முதலமைச்சர் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார்.கூட்டங்கள் போன்றவை நடைபெறும் பொழுது அதற்கு அதன் ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பு. உத்திரபிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சியின் போது என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். மேலும் பொது நிகழ்ச்சிகளில் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படுகிறது. 

சி.பி.எம் சார்பிலும் கரூர் சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் தாமதப்படுத்தாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை சந்தித்தார். ஆனால் சம்பந்தப்பட்ட அந்த அரசியல் கட்சித் தலைவர் அங்கிருந்து கிளம்பி உள்ளார். இதனை நீதிமன்றமும் சுட்டிக்காட்டி உள்ளது. 40க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கும் பொழுது அந்த தலைவர் அங்கிருந்து சென்றுள்ளார். அதனை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

Advertisment
Advertisements

பி.ரஹ்மான், கோவை 

Vijay Cpim kovai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: