scorecardresearch

கோவையில் 31-ம் தேதி பா.ஜ.க பந்த் தேவையா? மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் கேள்வி

யாரோ சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களையும் குற்றம் சுமத்த முடியாது – கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

CPI M questions need to erect pen statue for Karunanidhi inside Bay of Bengal

அரசியல் ஆதாயத்தோடு நடத்தப்படும் போராட்டங்கள் தேவையா என மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என கோவையில் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படியுங்கள்: அண்ணாமலையிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும் – அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி

அப்போது அவர் கூறியதாவது, 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு பிறகு ஒரு பதற்றம் கோவையில் ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைதியை விரும்புகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அன்றைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

கோவையில் ஒரு ஆபத்து இருப்பது தெரிய வருகிறது. டி.ஜி.பி துரிதமாக செயல்பட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டது மற்றும் தமிழக முதல்வர் இந்த வழக்கை என்.ஐ.ஏ.,விற்கு மாற்றி இருப்பது பாராட்டத்தக்கது

தமிழக அரசு உளவுத்துறை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். உளவுத்துறையை மேலும் பலப்படுத்த வேண்டும். என்.ஐ.ஏ புலனாய்வு செய்ததிலும் குறைபாடு உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும். என்.ஐ.ஏ.,வால் கூட முன்கூட்டியே கைது செய்யப்பட்டவர்கள் குறித்து கண்காணிக்கப்படாதது கேள்விக்குறி.

கோவையில் மத அடிப்படையில் மக்களை பிரித்துப் பார்க்காமல் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும். அமைதியை நிலைநாட்ட வேண்டும்.

பா.ஜ.க 31 ஆம் தேதி நடத்த இருக்கும் பந்த் தேவையா என்பதை யோசிக்க வேண்டும். அரசியல் ஆதாயத்தோடு நடத்தப்படும் போராட்டங்கள் தேவையா என மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். பதற்றமான சூழ்நிலையில் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். அனைவரும் இணைந்து அமைதியை காக்க செயல்பட வேண்டும்.

விசாரணை நடைபெறுவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். யாரோ சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களையும் குற்றம் சுமத்த முடியாது. இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Cpim secretary balakrishnan asks is bjp bandh necessary in kovai