/tamil-ie/media/media_files/uploads/2019/09/cpm-flag.jpg)
dmk donates left parties, dmk donates rs 10 crores to marxist communist party, CPI-M Explanation On Dmk election fund, CPI-M Explanation about dmk donation
CPM election expenditure affidavit not divulging DMK funds of Rs 10 crore : நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் சி.பி.ஐ மற்றும் சி.பி.எம் கட்சிகள் திமுகவுடன் கூட்டணியில் இருந்தனர். அப்போது தேர்தல் நன்கொடையாக திமுக சி.பி.எம் கட்சிக்கு 10 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. தேர்தல் முடிவடைந்த பிறகு ஒவ்வொரு கட்சியினரும், தேர்தலுக்கான வரவு செலவு விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில் திமுக சார்பில் பிரமாணப் பத்திரம் ஜூலை 10ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் சி.பி.எம் கட்சிக்கு வழங்கிய ரூ.10 கோடி நிதி குறித்து குறிப்பிட்டிருந்தது.
சி.பி.ஐ தரப்பு விளக்கம்
செப்டம்பர் 13ம் தேதி சி.பி.எம். கட்சி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அந்த ரூ. 10 கோடி குறித்த தகவல்கள் ஏதும் இடம் பெறவில்லை. மாறாக ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் சி.பி.எம். கட்சி தேர்தலுக்காக செலவிட்ட விபரங்களை மட்டுமே அறிவித்திருந்தது. இந்த தகவல்கள் வெளியானவுடன் பாஜகவினர் சி.பி.எம் கட்சியை விமர்சனத்துக்கு ஆளாக்கினர்.
சி.பி.எம் அளித்த விளக்கத்தில், கட்சியின் தேவையின் ஒரு தனி வேட்பாளரின் தேவையும் தொகுதி்க்கு தொகுதி மாறுபடும். மேலும் கட்சிக்குள் நடைபெறும் அனைத்து பணப்பரிவர்த்தனைகள் குறித்தும் தேர்தல் செலவு பிரமாண பத்திரத்தில் குறிப்பிடவேண்டியதில்லை என்று கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் அனுப்பப்படும் என்றும் அவர்கள் தரப்பு கூறியுள்ளது. சி.பி.எம். மாநில செயலாளர் பாலகிருஷ்ணனிடம் இது குறித்து கேட்ட போது, இதுவரை திமுகவிடம் இருந்து பெறப்பட்ட நிதி குறித்து தேசிய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டது. எனவே இதில் மறைப்படதற்கு ஒன்றுமே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சி.பி.எம் கட்சிக்கு ரூ. 10 கோடி நன்கொடையாக வழங்கிய திமுக, சி.பி.ஐ கட்சிக்கும் ரூ.15 கோடி நிதி ஒதுக்கியது. கொங்கு நாடு மக்கள் கட்சிக்கும் ரூ. 15 கோடி நிதி ஒதுக்கியதையும் தன்னுடைய பிரமாணா பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது திமுக.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.