அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தில் நடந்த சாதி வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட அ.தி.மு.க பிரமுகரை தி.மு.க-வினர் பாதுகாப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டில்லிபாபு குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மேலும், மாவட்டத்தில் ஜாதி தொடர்பான குற்றங்களை தடுப்பதில் காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் திறமை இல்லாதாவர் என்று சி.பி.எம் தலைவர் டில்லிபாபு குற்றம் குற்றம் சாட்டினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தில் தலித் மக்கள் மீதான சாதிய தாக்குதலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரி வட்ட செயலாளர் தோழர் டி. ராஜா தலைமையில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட வன்முறையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் டில்லிபாபு, இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய டில்லி பாபு, “கடந்த வாரம் சோக்காடி கிராமத்தில் நடந்த சாதி வன்முறை தொடர்பாக, சாதி இந்துக்கள் 10 பேர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் முதன்மைக் குற்றவாளியான அ.தி.மு.க கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியச் செயலாளரும் கிருஷ்ணகிரி ஒன்றியத் தலைவி அம்சாவின் கணவருமான சி ராஜன் (60) இன்னும் கைது செய்யப்படாமல் தலைமறைவாக உள்ளார். பர்கூர் தி.மு.க எம்.எல்.ஏ-வும், தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளருமான டி. மதியழகனும் குற்றம்சாட்டப்பட்ட அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் சி. ராஜனும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், அவருக்கு தி.மு.க எம்.எல்.ஏ டி. மதியழகன் பாதுகாப்பு அளித்து வருகிறார். இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித்துகளுக்கு எதிரான இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்தால், 2024 தேர்தலில் கிருஷ்ணகிரியில் தி.மு.க படுதோல்வி அடையும்” என்று கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து பேசிய டில்லி பாபு, “கடந்த ஓராண்டில் தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகளை கையாள்வதில் கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் திறமை இல்லாதவர். அவர் சாதி இந்துக்களை ஆதரிக்கிறார், குற்றம் சாட்டப்பட்ட சாதி இந்துக்களை கைது செய்யவில்லை. உதாரணமாக, இந்த ஆண்டு ஏப்ரலில் தலித் மக்களுக்கு எதிரான கோட்டையூர் வன்முறை வழக்கில், 12 தலித்துகள் காயமடைந்தனர். இந்த விவகாரம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொண்டு செல்லப்பட்டது.” என்று கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டில்லி பாபுவின் இந்த குற்றச்சாட்டுக்கு தி.மு.க எம்.எல்.ஏ டி. மதியழகன் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
இதனிடையே, சோக்காடி கிராமத்தில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் சி. ராஜனைக் கைது செய்யக் கோரி ஆட்சியர் கே.எம். சரயு, காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோரிடம் வி.சி.க கிருஷ்ணகிரி மத்திய மாவட்டச் செயலர் ஏ. மாதேஷ் மனு அளித்தார். தலைமறைவாக உள்ள சி. ராஜனை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“