சாதி ஆதிக்கம் போலவே ஏழை பணக்கார வித்தியாசம் இருக்கும் சமூகம் என்பதால் 10 % இட ஒதுக்கீடு சட்டத்தை சிபிஎம் ஏற்றுக்கொள்வதாக , அதன் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியை சேர்ந்தவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற தீர்ப்பு நேற்றைய தினம் வெளியானது. இந்நிலையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை விசாரித்தது. இதில் 3 நீதிபதிகள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். ஆனால் 2 நீதிபதிகள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில் விசிக-வின் தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில் “ இது சமூக நீதிக்கு எதிரானது. மேலும் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு கொண்டு சென்று. நீதிமன்றத்தில் முறையிடுவோம்” என்று கூறினார்.
தமிழக முதல்வரும் இது சமூக நீதிக்கு எதிரானது என்ற கருத்தைத்தான் முன்வைத்தார். ஆனால் திமுகவின் கூட்டணி கட்சியில் இருக்கும் சிபிஎம் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில் “ சாதி ஆதிக்கம் இருக்கும் இந்த சமூகத்தில்தான் ஏழை பணக்காரன் என்ற வகுப்பு வேறுபாடும் உள்ளது. இதனால் இந்த தீர்ப்பை ஏற்றுகொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.