மலக் குழி- கழிவு நீர் தொட்டி சுத்திகரிப்புக்கு நவீன எந்திரம்: சென்னை ஐ.ஐ.டி-க்கு பாராட்டு
சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கியுள்ள மலக்குழி மற்றும் கழிவுநீர்த் தொட்டி சுத்திகரிப்பு இயந்திரப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கியுள்ள மலக்குழி மற்றும் கழிவுநீர்த் தொட்டி சுத்திகரிப்பு இயந்திரப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
மலக் குழி- கழிவு நீர் தொட்டி சுத்திகரிப்புக்கு நவீன எந்திரம், சென்னை ஐ.ஐ.டி-க்கு பாராட்டு
தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கியுள்ள மலக்குழி மற்றும் கழிவுநீர்த் தொட்டி சுத்திகரிப்பு இயந்திரப் பயன்பாடு குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் குழு ஒன்று 06.04.2023 அன்று சென்னை ஐ.ஐ.டி யில் நேரில் ஆய்வு செய்தது.
Advertisment
இக்குழுவில் சிறப்புத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், பொருளாளர் இ.மோகனா,துணைத் தலைவர் பி.சம்பத் துணைப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாநில செயலாளர்கள் ஜானகிராமன், கா.வேணி, தென்சென்னை மாவட்ட செயலாளர் த.மணிகண்டன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் பி.ஆர்.முரளி மற்றும் மெட்ரோ தொழிலாளி பாலகிருஷ்ணன், பத்திரிக்கையாளர் எஸ்.எஸ்.சிந்தியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கி சோதனை பயன்பாட்டுக்கு வந்த இயந்திரத்தின் உள்ளடகத்தோடு ஆனால் எளிதில் ஒரு ஆட்டோவோடு இணைத்து எடுத்துச் செல்லக்கூடிய அளவில் வடிவமைக்கப்ட்டிருந்தது ஹோமோ செப் என்கிற பெயருடைய இந்த புதிய இயந்திரம்.
Advertisment
Advertisements
செப்டிக் டேங்குகளில் கெட்டித்தட்டியும், திடமாகவும், திரவமாகவும் கழிவுகள் இருக்கும். இதில் திரவநிலையில் உள்ளவற்றை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்துவிட்டு எஞ்சியுள்ள கெட்டிதட்டிப் போனவற்றை மண்வெட்டியால் அகற்றிட மணிதர்கள் இறங்கும் நிலையிலும் சில இடங்களில் விசவாயு தாக்கி மரணங்கள் ஏற்படுகிறது.
இத்தகைய செப்டிக்டேங் சுத்திகரிப்பில் பயன்படுத்தும் இயந்திரம் தான் இந்த "ஹோமோ செப்" என்கிற இந்த இயந்திரம். இதில் உள்ள பிளேடுகள் (மிக்சி ஜாரில் உள்ள பிளேடுகளின் மிகப் பெரிய வடிவம்) கெட்டியான கழிவுகளைக் கூழாக்கி திரவ வடிவத்துக்கு மாற்றும். பின்னர் குழாய் மூலம் அந்த கழிவுகள உறிஞ்சி வெளியேற்றிக்கொள்ளலாம்.
இயந்திரத்தை உருவாக்கிய குழுவின் தலைவர் முனைவர் பிரபு ராஜகோபால் மற்றும் ஆய்வு மாணவர் பிரபாகரன் ஆகியோர் இயந்திரப் பயன்பாடு குறித்து விளக்கினார்கள்.அவர்களின் சமூக பங்களிப்பிற்குத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வாழ்த்துக்களைத் தெரிவித்தது.
இதனை சமூகத்தின் பயன்பாட்டிற்கு கொண்டுவர பாடுபடுவோம் என்று வாக்குறுதி அளித்ததோடு, மேலும் எத்தகைய கருவிகளும், இயந்திரங்களும் தேவையாக உள்ளது என்பதையும் இக்குழு வலியுறுத்தியது.
அதே நேரத்தில் இந்த இயந்திரத்தை அனுபவம் பெற்றவர்களைக் கொண்டு சோதனை செய்து உடனடியாக சமூக பயன்பாட்டிற்குக் கொண்டு வர அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளைத் துவங்கிட வேண்டும் எனவும், இத்தகைய ஆராய்ச்சிகளை அதிகப்படுத்திடவும், மேம்படுத்திடவும் துப்புரவு பொறியியல் துறையை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு துவங்கிட வேண்டும் எனவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மீண்டும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”