திருச்சி கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு அணை அமைந்துள்ளது. காவிரி இவ்விடத்தில் மூன்று முனையிலும் ஆறாக பிரிவதால் முக்கொம்பு என பெயர் பெற்றது.
இங்கிருந்துதான் காவிரி ஆறானது காவிரி, கொள்ளிடம் எனப் பிரிகிறது.
இந்த அணையில் உள்ள கொள்ளிடம் பாலம் சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இதற்கிடையை, காவிரி பாலத்தில் பழுதான 35-வது மதகிற்கு அருகிலுள்ள 38-வது மதகு பகுதியில் பாலத்தின் பக்கவாட்டில் இருந்து புதியதாக விரிசல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், பாலத்தில் மற்றொரு மதகுப் பகுதியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
பாலத்தின் அடிப்பகுதியில் காப்பர் பீம் போட்டு கட்டப்பட்டிருப்பதால் பாலத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தாலும், இயற்கையின் சீற்றத்தோடு ஒப்பிடுகையில் எப்போ, என்ன நடக்குமோ என்ற அச்சம் அப்பகுதியினரையும், விவசாயிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பாலத்தில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பாலத்தை பலப்படுத்தி மக்கள் அச்சத்தை போக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“