சென்னை சூளைமேடு பகுதியில், வாகன சோதனையின் போது தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரியை மிரட்டி ஆபாசமாக பேசியதற்காக, பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
Advertisment
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜே.சத்யராஜ் (வயது 32), ஏ.வினோத்குமார் (வயது 32), மற்றும் எஸ்.அக்ஷயா (வயது 30) என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
போலீஸ் தரப்பில், சூளைமேடு ஸ்டேஷன் அதிகாரிகள் குழு திங்கள்கிழமை சூளைமேடு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு அருகே வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இருவரும் மூச்சு பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், வாகனங்களின் ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், இருவரிடமும் ஒரு பைக்கிற்கான சரியான ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு மறுநாள் ஸ்டேஷனில் இருந்து எடுத்துச் செல்லும்படி கூறப்பட்டது. இருப்பினும் மூவர் அதிகாரிகளுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனே, சத்யராஜின் மனைவி அக்ஷயா, சம்பவ இடத்துக்கு வந்து, போலீஸ் அதிகாரிகளை துஷ்பிரயோகம் செய்தார். மேலும் ஒரு நபர் மீது தொப்பியை வீசினார். சூளைமேடு சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில், விரைவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
செவ்வாய்கிழமை மதியம், சென்னை பெருநகர காவல்துறை ட்விட்டரில் பதிவிட்டில், “மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது", என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil