scorecardresearch

ரூ.2,438 கோடி மோசடி: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் இயக்குனர் கைது

தற்போது, நிர்வாகத்தின் இயக்குனரை கைது செய்ததையடுத்து, மீதம் ஐந்து பேர் தலைமறைவாக உள்ளனர்.

gold

ஆருத்ரா கோல்ட் இயக்குனர் மைக்கேல் ராஜை பொருளாதார குற்றப்பிரிவு (EOW), இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்தது.

ராஜ் புதன்கிழமை துபாயில் இருந்து சென்னை வந்தார். அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் போடப்பட்டதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த நிர்வாகத்தின் இருந்த கே ஹரிஷ் மற்றும் ஜே மாலதி ஆகியோர் சமீபத்தில் காவல்துறை கைது செய்தது. தற்போது, நிர்வாகத்தின் இயக்குனரை கைது செய்ததையடுத்து, மீதம் ஐந்து பேர் தலைமறைவாக உள்ளனர்.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் செப்டம்பர் 2020 முதல் மே 2022 வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடம் இருந்து நிதி வசூலித்து ரூ.2,438 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது. அபரிமிதமான வட்டி விகிதங்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால் மக்கள் பணத்தை டெபாசிட் செய்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Crime news download Indian Express Tamil App.

Web Title: Aarudhra gold trading director arrested at chennai airport

Best of Express