பா.ம.க அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி ராமதாஸ்; புதிய இடம் தி.நகரில்!

பா.ம.க அலுவலக முகவரி சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றத்தை பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.

பா.ம.க அலுவலக முகவரி சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றத்தை பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.

author-image
WebDesk
New Update
Anbumani sozhinganallur

பா.ம.க அலுவலக முகவரி சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ம.க அலுவலக முகவரி சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றத்தை பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது.

Advertisment

பா.ம.க-வில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதல் அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க-வில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை டாக்டர் ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கிய நிலையில், அவர்கள் கட்சியில் அதே பதவியில் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பா.ம.க அலுவலக முகவரி சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisment
Advertisements

இது குறித்து வெளியான தகவல்களின்படி, பா.ம.க-வினருக்கு வழங்கப்பட்ட புதிய உறுப்பினர் படிவங்களில் கட்சியின் புதிய அலுவலக முகவரி இடம் பெற்றுள்ளது. அதன்படி, முன்பு தேனாம்பேட்டையில் இருந்த அலுவலக முகவரிக்கு பதிலாக, தி.நகர் திலக் நகர் தெருவில் உள்ள புதிய முகவரி உறுப்பினர் படிவத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த அலுவலக மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், புதிய உறுப்பினர் படிவங்கள் மூலம் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Anbumani Ramadoss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: