புதுச்சேரி பாகூரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தாண்டவராயன் என்பவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் லோன் வாங்குவதாக நினைத்து ரூ.8 லட்சத்து 80 ஆயிரத்தை இணைய வழி மோசடிக்காரர்களிடம் இழந்தார்.
இது தொடர்பாக அவர் சைபர் க்ரைம் போலீசில் இன்று புகார் அளித்தார். இது தொடர்பாக ஆய்வாளர் கீர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் இது தொடர்பாக விழிப்புணர்வு செய்தனர். அதில், “நீங்கள் எந்த ஒரு இணையதள முகவரியை தொடர்பு கொள்ளும் பொழுதும் கீழ்க்கண்ட விஷயங்களை கட்டாயமாக சரி பார்த்த பிறகு அதில் நீங்கள் தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மேலும், இணையத்தில் தாங்கள் தேடுகின்ற தளங்களை சோதித்துப் பார்க்க வேண்டும். தவறாகபடும்பட்சத்தில் புதுச்சேரி இணைய வழி காவல் துறையை நாட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே புதுச்சேரியில் பொறியாளர், ராணுவ வீரர் என பலரும் இதுபோன்ற புகார்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“