600 பெண்களின் ஆபாச புகைப்படம் வீடியோக்களை வாங்கி மிரட்டிய ஐடி பொறியாளர் கைது

நட்சத்திர ஹோட்டல்களில் அலுவலக வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600 பெண்களின் நிர்வாண புகைப்படம், வீடியோக்களை பெற்று பின்னர் அவர்களுக்கு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேந்த ஐ.டி.பொறியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

By: August 25, 2019, 2:02:07 PM

Chennai IT Engineer arrested: நட்சத்திர ஹோட்டல்களில் அலுவலக வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600 பெண்களின் நிர்வாண புகைப்படம், வீடியோக்களை பெற்று பின்னர் அவர்களுக்கு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேந்த ஐ.டி.பொறியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

16 மாநிலங்களைச் சேர்ந்த 600 பெண்கள் நட்சத்திர ஹோட்டல் அலுவலக வேலைக்காக சென்னையில் மனிதவள மேலாளர் என்ற போர்வையில் உள்ள ஒரு ஐ.டி பொறியாளருக்கு தங்கள் நிர்வான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளனர். அவர் அந்த பெண்களுக்கு பணம் கேட்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய விவகாரம் தெரியவதுள்ளதுள்ளது.

இது தொடர்பாக, ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் பொறியாளர் கிளமெண்ட் ராஜ் செழியன் என்கிற பிரதீப் என்பவரை சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் சைபராபாத் போலீசார் அவரை கைது செய்து ஐதராபாத் அழைத்து சென்றுள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் பிரதீப் தனது வீட்டிலிருந்து போலியாக மனிதவள அலுவலகத்தை நடத்தி வருவதாகவும், 600 பெண்களை ஏமாற்றி புகைப்படங்களை வாங்கியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

பிரதீப்புக்கு இரவு நேரப்பணி என்பதால் பணி முடிந்து பகல் பொழுதில், தனியாக இருந்துள்ளார். இதனால், மனப்புழுக்கத்தில் இருந்ததாகவும் அப்போது, இணையம் வழியாக பெண்களின் போன் நம்பர்களை சேகரித்து அவர்களுடன் பேசியுள்ளார். தான் ஒரு மனிதவள மேலாளர் என்று கூறிக்கொண்டு, நட்சத்திர ஓட்டல்களில் அலுவலக வேலைக்கு பெண்கள் தேவை என்று கூறி அவர்களுடைய நிர்வாண புகைப்படம் வீடியோக்களை வாங்கியுள்ளார். பின்னர், அவர்களுக்கு பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதில் பெரும்பாலும் வட மாநில பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மியாப்பூர் போலீசாரும் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். போலீசாரின் விசாரணையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Crime News by following us on Twitter and Facebook

Web Title:Chennai it engineer lures 600 girls nude photos videos for jobs arrested

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X