scorecardresearch

சென்னை; கதவை தட்டிய பெண் போலீஸ்.. தாக்கிய போதை ஆசாமி

ஞாயிற்றுக்கிழமை, இன்ஸ்பெக்டர் சுமதி, பெண் காவலர் தமிழ் இலக்கியாவுடன் ஆற்காடு சாலையில் சந்தேகத்துக்கிடமான ஒருவர் தங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு விசாரிக்க சென்றுள்ளனர்.

சென்னை; கதவை தட்டிய பெண் போலீஸ்.. தாக்கிய போதை ஆசாமி

கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி, சென்னை விருகம்பாக்கம் சாலிகிராமன் குமரன் நகரில், வீடு புகுந்து, வீட்டில் இருந்தவர்கள் இல்லாத நேரத்தில், 50 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், 13 லட்சம் ரூபாய் ஆகியவை திருடு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை, இன்ஸ்பெக்டர் சுமதி, பெண் காவலர் தமிழ் இலக்கியாவுடன் ஆற்காடு சாலையில் சந்தேகத்துக்கிடமான ஒருவர் தங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு விசாரிக்க சென்றுள்ளனர்.

சந்தேகத்திற்கு இடமளிக்கும் அந்த நபரை, இரண்டு பெண் போலீசார் விசாரிக்கச் சென்றபோது, ​​அப்பகுதியில் மின்சாரம் இல்லாததால், அந்த நபரின் கதவைத் தட்டாமல், பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டியுள்ளனர்.

விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள கதவு எண் 36ல் வசிக்கும் பொன்னுவேல் (வயது 69), மற்றும் சி சுகுமார் (வயது 52) என அந்த வீட்டைச் சேர்ந்த இருவர், பெண் போலீஸாரை தாக்கினர். மேலும் அந்த இரண்டு நபர்கள் குடிபோதையில் இருந்ததால், இன்ஸ்பெக்டரையும் தாக்கியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

படுகாயம் அடைந்த பெண் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் தமிழ் இலக்கியா ஆகியோர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதை தொடர்ந்து, அந்த இறந்து நபர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Crime news download Indian Express Tamil App.

Web Title: Chennai virugambakkam two women cops were assaulted by drunken men

Best of Express