அரும்பாக்கத்தில் வாடகைக்கு வீடு கேட்பதாக கூறி ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரின் மனைவியான 72 வயது மூதாட்டியை, கட்டி வைத்து கொள்ளையடித்த மூவரை நகர போலீஸார் தேடி வருகின்றனர்.
அவரது வீட்டில் இருந்து 30 சவரன் தங்க நகை மற்றும் ரூ.60,000 ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர். அந்த கும்பல் அந்த பெண்ணின் சில ஆடைகளை கழற்றி படம்பிடித்ததாகவும், இதனால் காவல்துறையை அணுக வேண்டாம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவின் முதல் தளத்தில், கங்கா என்ற பெண் வசித்து வந்ததாக காவல்துறை தெரிவித்தது. கணவர் உமாசங்கர் இறந்த பிறகு, அவர் தனது மகன் மகாதேவ பிரசாத் மற்றும் மருமகள் ஜெயஸ்ரீ ஆகியோருடன் தங்கியிருந்தார்.
திங்கள்கிழமை மாலை, அவரது மகனும் மருமகளும் வேலைக்குச் சென்றபோது, மூன்று பேர் கதவைத் தட்டி, கங்காவிடம் வாடகைக்கு காலியான பகுதியைக் கேட்டனர். அவர் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவரை உள்ளே தள்ளிக் கட்டி, வாயைக் கட்டினர்.
வீட்டிற்கு வந்த மகன் தாயை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது புகாரின் பேரில் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சந்தேக நபர்களை கண்டுபிடிக்க போலீசார் அருகில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்தனர். இதைப்பற்றி மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil