சென்னை தாம்பரத்தில் பணியாற்றி வரும் வாலிபரை தாக்கி செல்போன்களை பிரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரத்தில் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் குமார் என்ற இளைஞர் பணி முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது, கடப்பேரி பகுதியை சேர்ந்த சிலர், அவர்களை மிரட்டி 2 செல்போன்களை பறித்துள்ளனர். அவற்றை கேட்டு சுராஜ்குமார் என்ற வாலிபர் விரட்டியபோது, அரிவாளால் அந்த கும்பல் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதில் காயமடைந்த சுராஜ்குமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த தாக்குதலினால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாம்பரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். தாம்பரத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil