scorecardresearch

தமிழக பிளஸ் 2 மாணவர்களின் தரவுகள் திருட்டு: ஆடியோ ஆதாரத்துடன் பள்ளி கல்வித் துறை புகார்

இது போன்ற தரவுகள், ‘தார் வெப்சைட்’ என்று சொல்லக்கூடிய, வெகு விரைவில் கிடைக்கமுடியாத இணையத்தில் மாணவர்களின் தரவுகள் விற்கப்பட்டுள்ளது.

dpi
பள்ளிக் கல்வித்துறை

பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி விற்பனை செய்த விவகாரங்கள் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இணைய(ஆன்லைன்) வழியாக குறிப்பிட்ட கும்பல், தமிழ்நாடு முழுவதும் படித்துவரும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுடைய தரவுகள் (பெயர், ஊர், விலாசம், அவர்கள் எடுத்த மதிப்பெண்) போன்றவைகளை திருடி, அதை ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் தொடர்புகொண்டு ரூ.5,000 முதல் விற்பனை செய்து வருவதாக குற்றசாட்டு எழுந்தது. குறிப்பாக இது தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து நிமிடத்திற்குள்ளே, 1000-5000 மாணவர்களின் தரவுகளை, எந்த மாவட்டத்தில் இருந்து உங்களுக்கு வேண்டுமோ அவ்வாறு விற்பனை செய்யப்படும் என்கின்ற தகவல் அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற தரவுகள், ‘தார் வெப்சைட்’ என்று சொல்லக்கூடிய, வெகு விரைவில் கிடைக்கமுடியாத இணையத்தில் மாணவர்களின் தரவுகள் விற்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அனைவருக்கு கல்வி என்கிற திட்டத்தின் மாவட்ட அலுவலர் புண்ணியகோடி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுபோல, சமீபத்தில் மக்களின் வங்கித்தரவுகளை இணையத்தில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. ஆனால், தற்போது பள்ளி மாணவர்களின் தரவுகள் இதைப்போன்று மிகவும் வெளிப்படையாக விற்பனை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை மாநகராட்சியில் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Crime news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu 10th 12th students information on dark web dpi filed case