scorecardresearch

தமிழகத்தில் முதல் முறை… பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ; யார் இந்த மீனா?

தாக்குதலில் ஈடுபட்ட ரவுடியை தனது துப்பாக்கியால் சுட்டு பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளர் சமூகவலைத்தளங்களில் பாராட்டை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் முதல் முறை… பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ; யார் இந்த மீனா?

சென்னை அயனாவரம் பகுதியில் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட ரவுடியை தனது துப்பாக்கியால் சுட்டு பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளர் சமூகவலைத்தளங்களில் பாராட்டை பெற்று வருகிறார்.

கடந்த ஒரு வாரத்தில், தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறும் துப்பாக்கிசூடு சம்பவங்களால் பரபரப்பு நிலவி வருகிறது.

குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்த அழைத்து செல்லும்போது, காவலர்களை தாக்கி குற்றவாளிகள் தப்பிக்க முயற்சி செய்வதால், துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கின்றனர் காவலர்கள்.

கடந்த ஒரு வாரத்தில் நடந்த மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்களால், சென்னையில் காவலர்களை தாக்கி தப்பிக்க முயன்ற குற்றவாளியை அயனாவரத்தை சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் மீனா துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் மூலம், தமிழகத்தில் முதன்முறையாக குற்றவாளியை சுட்டு பிடித்த பெண் என்ற பெருமையை மீனா பெற்றிருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரங்கத்தைச் சேர்ந்தவர் காவல் உதவி ஆய்வாளர் மீனா. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் சென்னை புரசைவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார்.

2009ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர், முதலில் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்.

2016ஆம் ஆண்டு எஸ்.ஐ., தேர்வில் தேர்ச்சிபெற்று, தலைமை செயலக காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, உதவி ஆய்வாளர் பயிற்சியின் பொது துப்பாக்கிச் சூட்டில் பதக்கம் பெற்ற இவருக்கு, குற்ற பிரிவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

முதலில், கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படையில் பணியாற்றினார். அதன் பிறகு, உதவி ஆணையரின் தனிப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இதனிடையே, தற்போது நடந்துள்ள தாக்குதலில் ஈடுபட்ட ரவுடியை தனது துப்பாக்கியால் சுட்டு பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளர் மீனா, சமூகவலைத்தளங்களில் பாராட்டை பெற்று வருகிறார்.

Stay updated with the latest news headlines and all the latest Crime news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu police meena shoot accused to capture chennai

Best of Express