/indian-express-tamil/media/media_files/RvBgfsjD1lxbBQUSmrmt.jpg)
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக உப்பு கழக நிர்வாக இயக்குனரை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
தமிழ்நாடு உப்புக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சி.என்.மகேஸ்வரனுக்கு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அதில், “குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” எனவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அதிகாரிக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை முடித்து வைத்த நீதிபதி மும்மினேனி சுதீர் குமார், 2017 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவு ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு ஏழு ஆண்டுகள் தாமதமாகிவிட்டதால், அவமதிப்புக்காக அதிகாரியை இப்போது தண்டிக்கத் தேவையில்லை என்றார். தொடர்ந்து, “எனினும், எதிர்மனுதாரர் உடனடி வழக்கில் அவர் நடந்துகொண்ட விதத்தில் எதிர்காலத்தில் செயல்படக்கூடாது என்றும், எதிர்காலத்தில் இந்த நீதிமன்றத்தால் இயற்றப்படும் நீதித்துறை உத்தரவுகளுக்கு இணங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் எச்சரிக்கப்பட வேண்டும்“ என்றார்.
முன்னதாக, தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தில் எலக்ட்ரீசியன் சி.முருகன், திரு.மகேஸ்வரன் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
TWAD வாரியத்தின் அப்போதைய நிர்வாக இயக்குநர், மனுதாரரின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை நான்கு வாரங்களுக்குள் மறுசீரமைக்க வேண்டும் என்ற 2017 நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதிகப்படியான தாமதம் குறித்த வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, “எதிர்வாதியின் இத்தகைய தாமதம் நியாயமானது என்று கூற முடியாது” எனத் தெரிவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.