பழங்குடியின இளம்பெண் தன்னை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு, தனது உறவினர்கள் விற்க திட்டமிடுவதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
படப்பையில் உள்ள கரசங்கலைச் சேர்ந்த இளம்பெண், பெற்றோரின் பேச்சிற்கிணங்கி 7 ஆம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.
சமீபத்தில், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை, ஆந்திராவைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து தருவதாக கூறி, 1.5 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்றதாக கூறப்படுகிறது.
1.5 லட்ச ரூபாய்க்கு ஆந்திராவைச் சேர்ந்த ஒருவருக்கு தனது உறவினர்கள் விற்றதால் அதிர்ச்சியடைந்த 16 வயது சிறுமி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதுபற்றி அறிந்ததும் அந்த பெண் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்துள்ளார். இதையொட்டி போலீசார் குழந்தை உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, சைல்டு ஹெல்ப்லைன் குழுவினர் மற்றும் மணிமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள், அவரது வீட்டுக்குச் சென்று சிறுமியை பெற்றோரிடம் இருந்து மீட்டனர்.
போலீஸ் ஸ்டேஷனில், அதிகாரிகளிடம், தனக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை எனவும், அவள் படிப்பைத் தொடர விரும்புவதாகவும் கூறினார்.
மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் அதிகாரிகள் சிறுமியை காஞ்சிபுரத்தில் உள்ள அரசு இல்லத்துக்கு அனுப்பியது. இதுகுறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil