சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் கட்டப்பட்டது. நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் உணவகம், ஓய்வு அறை, வாகன பார்கிங் என பல்வேறு வசதிகள் உள்ளன.
நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பயணிகள் அவசர சிகிச்சைக்கு நிரந்தர ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்கு 91542 67794 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இதற்கிடையில், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் செல்வதில் பிரச்னைகள் தொடர்ந்தன. அந்தப் பிரச்னைகளும் தற்போது தீர்க்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாகவும், ஆம்னி பேருந்துகளும் தொடர் பிரச்னைகளை சந்திப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா அளித்த பேட்டியில், “கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் மீது காவல்துறை மூலமாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“