scorecardresearch

விசாரணை கைதிகளின் பற்கள் உடைப்பு; பல்வீர் சிங் மீது கிரிமினல் வழக்குப் பதிவு

விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறை அதிகாரி பல்வீர் சிங் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Criminal case registered against Balveer Singh
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தும், பிடுங்கியும், கற்களை வாயில் போட்டு உதடுகளிலும், கன்னத்திலும் குருதி வரும் வரை காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் தாக்கினார் என்ற புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக விசாரணை நடத்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது. முன்னதாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பல்வீர் சிங் மீது தற்போது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மரணத்தை விளைவிக்கும் வகையில் ஆயுதத்தால் தாக்குதல், சித்தரவதை செய்தல் ஆகிய குற்றங்களுக்கான ஐ.பி.சி 326 பிரிவின் கீழ் பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வீர் சிங் தொடர்பாக பிரச்னை சட்டப்பேரவையில் எழுந்த போது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Criminal case registered against balveer singh