ஆக்டோபஸ்... புது சாஃப்ட்வேர் உருவாக்கும் கோவை போலீஸ்: கிரிமினல்கள் டேட்டா பதிவு செய்ய முடிவு

கோவையில் மாநகர காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவையில் மாநகர காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Criminals cant escape Octopus project in Coimbatore

கோவையில் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஆக்டோபஸ் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கோவையில் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஆக்டோபஸ் என்ற திட்டம் மூலம் குற்றவாளிகளின் தரவுகளை பதிவு செய்ய மென்பொருள் உருவாக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Advertisment

கோவையில் மாநகர காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் சுமார் 35 லட்சம் மதிப்பிலான 170 செல்போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

பீளமேடு பகுதியில் இரவு நேரங்களில் நடந்த கொள்ளை தொடர்பாக ரவிச்சந்திரன் என்ற முக்கிய குற்றாவளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 36 சவரன் நகை , innova car, 25 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

தொடர்ந்து, 2 சக்கர வாகனத்தில் நோட்டமீட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. பொதுமக்கள் கோடை விடுமுறைக்கு வெளியே செல்லும் போது beat காவல்துறை பணியாளர்களிடம் கூற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

பகல் நேரங்களில் பெரிய அளவில் கொள்ளைகள் இல்லை எனவும் ஆக்டோபஸ் என்ற scheme மூலம் மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டு குற்றவாளிகளின் தகவல்கள் பதிவு செய்ய
Server நம்மிடமே உள்ளது.

பல்வேறு குற்றவாளிகள் குறித்து digital முறையில் one touch இல் அணைத்து குற்றவாளி தகவல்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் Database இல் சேமித்து எப்போது தேவைப்படுமோ பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது இந்த ஆக்டோபாஸ் மூலம் என தெரிவித்த அவர், Intelligence காவல்துறை அதிகாரிகள் மட்டுமே பயன்படும் வகையில் இந்த software வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

எனவே தகவல்கள் வெளியே செல்ல வாய்ப்பு இல்லை என கூறினார். தொடர்ந்து பேசி அவர் தங்கநகை பட்டறை உரிமையாளர்களிடம் கூட்டம் நடத்தி கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, நீண்ட நாட்கள் நம்பிக்கை ஏற்படுத்தி கொள்ளை அடித்து சென்று விடுகின்றனர்.

குறிப்பாக ஏப்ரல் மாதங்களில் அதிக விபத்துகள் ஏற்படுவது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என இவ்வாறு அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Artificial Intelligence

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: