பணியில் இருந்த சிஆர்பிஎப் துணை கமாண்டன்ட் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை!

மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

CRPF deputy commandant dead:பூந்தமல்லியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை துணை கமாண்டன்ட் ஒருவர், துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த பூந்தமல்லி, கரையான்சாவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை துணை கமாண்டன்ட்ஸ்ரீஜன் (50). கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.நேற்று காலை, வழக்கம்போல் பணிக்கு வந்த ஸ்ரீஜன், தன் அறைக்கு சென்றார்.

அறைக்கு சென்ற சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டு அங்கு பணியில் இருந்த போலீசார், அவரது அறைக்குள் சென்று பார்த்தனர். ஸ்ரீஜன், துப்பாக்கியால், தன்னைத்தான்சுட்டு, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். இதையடுத்து ஸ்ரீஜனை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஸ்ரீஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். ஸ்ரீஜனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பூந்தமல்லி போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர்.

சிஆர்பிஎப் உயரதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அவரது அலுவலக அறையில் இருந்து, ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில் தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்றும், சொந்த பிரச்னை காரணம் என்றும், குறிப்பிட்டுள்ளார். சிஆர்பிஎப் துணை கமாண்டன்ட் பணியின்போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரைபிள் துப்பாக்கியை வாங்கி கொண்ட்ய் தனது அறைக்குசென்ற ஸ்ரீஜன் அதே அறையில் இறந்து கிடந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Crpf deputy commandant dead crpf deputy commandant srijan shoots himself

Next Story
இன்று இடுக்கி; நாளை நீலகிரியாகவும் இருக்கலாம்: எச்சரிக்கும் காலநிலை மாற்றம்Munnar Pettimudi landslide 2020 : Climate change and weather pattern warn Nilgiris
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express