தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, அ.தி.மு.க.வுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த ரூ.6 கோடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மட்டும் ரூ.4 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளன என்ற புதிய விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், தேர்தல் பத்திரங்களில் அளிக்கப்பட்ட நன்கொடைகளின் விவரங்களை வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. மேலும், தேர்தல் பத்திரங்களின் விவரங்களை சமர்பிப்பதற்கு, கால அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கியின் கோரிக்கை நிராகரித்தது.
இதைத்தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது.
இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளன என்ற புதிய விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நன்கொடை அளித்துள்ளன என்ற விவரம் இடம்பெற்றுள்ளது.
அதன்படி, தேர்தல் பத்திரம் மூலம், தி.மு.க-வுக்கு கிடைத்த, ரூ. 656.5 கோடி நன்கொடையில், லாட்டரி மார்ட்டின் பியூச்சர் கேமிங் நிறுவனம் மட்டும் 509 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
அதே நேரத்தில், மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் அ.தி.மு.க.வுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த ரூ.6 கோடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மட்டும் ரூ.4 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
கோயம்புத்தூர் தலைமையிடமாக கொண்ட லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் என்ற நிறுவனமும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.1 கோடியை அ.தி.மு.க.வுக்கு நிதியாக அளித்துள்ளது. அடுத்து, சென்னையை சேர்ந்த கோபால் ஸ்ரீனிவாசன் அ.தி.மு.க.வுக்கு ரூ.5 லட்சத்தை தேர்தல் பத்திரம் நன்கொடையாக அளித்துள்ளார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் புதிய தரவுகளின்படி, மத்தியில் ஆளும் பா.ஜ.க தேர்தல் பத்திரம் மூலமாக மொத்தமாக ரூ.6,986.5 கோடியை பெற்றுள்ளது. இவற்றில் 2019-20-ம் ஆண்டு மட்டும் ரூ.2,555 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“