/indian-express-tamil/media/media_files/2025/06/20/cuddalore-sexual-abuse-2025-06-20-10-50-33.jpg)
மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். குற்றவாளி தப்பி ஓடும்போது கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் கே ஆடூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (32). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 18ஆம் தேதி கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், எனக்கும் பச்சையம்மாள் என்பவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது சந்தோஷ், கஜேந்திரன் என இரண்டு ஆண் குழந்தைகளும், சரோஜா ,ரோஷினி இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
மகன் கஜேந்திரன் என்னுடன் இருந்து வருகிறார். மனைவி பச்சையம்மாள் மற்ற 3 குழந்தைகளையும் அழைத்துகொண்டு அவரது சித்தப்பா மகன் ஜீவா என்வருடன் திருவண்ணாமலை மாவட்டம் குனகம்பூண்டியில் வசித்து வருகிறார்.
17.06.2025 தேதி இரவு இளைய மகள் ரோஷினி மயக்கம் போட்டு விழுந்து விட்டதால் திண்டிவனம் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்த போது குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். பச்சையம்மாள் குழந்தை தூக்கி கொண்டு சிதம்பரம் வருவதாக கூறினார். ஆனால் அவர் சிதம்பரம் வராமல் கடலூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. கடலூர் வந்து பார்த்தபோது எனது மகள் இறந்திருந்தாள். அவளது உடலில் காயங்கள் இருந்தது. எனது மகள் இறப்பில் சந்தேகம் இருக்கிறது. உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
/indian-express-tamil/media/post_attachments/b56c18aa-940.jpg)
புகார் மனு சம்பந்தமாக கடலூர் புதுநகர் காவல் நிலைய குற்ற எண்: 267/25 U/s 194(i) BNSS ன்படி சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் ரூபன்குமார் மேற்பார்வையில் கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் முத்துகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கவியரசன், பிரசன்னா ஆகியோர் இறந்துபோன ரோஷினி உடலை கைப்பற்றி, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை கல்லூரியில் உடற்கூறாய்வு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்துபோன சிறுமி உடலில் காயங்கள் இருந்தது மற்றும் விசாரணை அடிப்படையிலும் உடல் கூறு பரிசோதனை அடிப்படையிலும் 3 வயது குழந்தை, பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்யப்பட்டுள்ளது ஊர்ஜிதம் ஆனது.
அதன்படி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஜீவா (வயது 25) என்பவரை காவல் ஆய்வாளர் முத்துக்குமார், உதவி ஆய்வாளர் கவியரசன் மற்றும் போலீசார் திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த நிலையில் கைது செய்தனர்.
கடலூர் புதுநகர் காவல் நிலையம் கொண்டு வரும் வழியில் குமத்தான்மேடு சோதனை சாவடி அருகில் சிறுநீர் கழிப்பதாக கூறியவரை இறக்கி விட்டபோது பாலத்தின் மேலிருந்து திடீரென கீழே குதித்து தப்பிக்க முயன்ற போது அவரது வலது காலில் பலத்த அடிபட்டது. இதனையடுத்து அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாபு ராஜேந்திரன், கடலூர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us