கடலூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் 3-வது மாபெரும் புத்தகத் திருவிழா, மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று முதல் வருகிற 31 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்தப் புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான புத்தக அரங்குகள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளன. தினந்தோறும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு தனித்திறன் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், மாலை நேரத்தில் பல்வேறு சிறப்பு பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றம், உள்ளூர் படைப்பாளர்களின் சொற்பொழிவுகள், உள்ளூர் நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறவுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/6ccb0806-97e.jpg)
இது தவிர குழந்தைகள் மகிழும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள், பாரம்பரிய உணவு அரங்கம், மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோளரங்கம், முப்பரிமான காட்சியரங்கம், வி.ஆர்.அரங்கம், புத்தக வாசிப்புக் கூடம் போன்ற அனைத்து சிறப்பம்சங்களும் இந்த புத்தகத் திருவிழாவில் உள்ளது. பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள் என அனைவரும் புத்தகத் திருவிழாவிற்கு வந்து புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சி.பி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்.