இப்படி ஒரு தீர்ப்பா? தவறு செய்த குற்றவாளிக்கு 50 ஆண்டுகள் சிறை!

Cuddalore Child Rape Case, Man Got 50 Years Prison:   சிறுமியின் அலறல்சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பழனிசாமியை...

Cuddalore Child Rape Case :  கடலூரில்   2 வயது சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்த  நபருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக காத்திருந்த  சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இந்த தீர்ப்பை வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.  இப்படியொரு தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கும் பாராட்டுக்கள்  குவிந்து வருகிறது.

Cuddalore Court Sentenced Rapist 50 Years Imprisonment for Raping 2 Year Old:  வரலாற்று தீர்ப்பு!

சிதம்பரம் அருகே 2 வயது சிறுமியை பழனிசாமி என்பவர்  பாலியல் வன்கொடுமை செய்த சமப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த ஏப்ரல் மாதம்   பழனிசாமி கட்டிட வேல செய்வதற்காக சிறுமியின் வீட்டிற்கு சென்றிருந்தார்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து,  2 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.   சிறுமியின் அலறல்சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பழனிசாமியை கையும் களவுமாக பிடித்து  போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பழனிச்சாமியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீ ஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப் பட்டது.

அதில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சட்டத்தின் கீழ் பழனிச்சாமிக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயி ரம் அபராதமும், மற்றொரு பிரி வின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத் தில் அனுபவிக்க நீதிபதி தீர்ப்பளித்தார்.

பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close