கடலூர் மாவட்ட ஆட்சியர், இருசக்கர வாகனத்தில் சென்று மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம், குமராட்சி அருகே உள்ள செங்கழுநீர் பள்ளம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாள்களாக பெய்த அதி கனமழையால் குமராட்சி பகுதியில் உள்ள அனைத்து ஓடைகளிலும், வாய்க்கால்களிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
அந்த வகையில் மணவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், செங்கழுநீர் பள்ளத்தில் உள்ள வீடுகள் அனைத்தையும் சூழ்ந்தது. இதனால் அக்கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையையும் வெள்ளம் மூழ்கடித்ததால் அப்பகுதிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றார். அப்போது, சாலையை வெள்ளம் சூழ்ந்தபடி இருந்ததால், அவர் தனது வாகனத்தில் செல்ல முடியாத சூழல் உருவானது.
இதனால், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன், இருசக்கர வாகனத்தில் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அதன் பின்னர், காட்டுமன்னார்கோவில், குமராட்சி உள்ளிட்ட பல பகுதிகளில் அவர் பார்வையிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“