/indian-express-tamil/media/media_files/2025/04/07/SKprWtwGI9kS7rHp9Q4j.jpg)
திண்டிவனம் ரயில் நிலையம் முதல் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் வரை புதுச்சேரி வழியாக சுமார் 65 கி.மீ. நீளத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்கு வருகின்ற ஆலோசனை கூட்டம் வருகிற 23-ல் கடலூர் கலெக்டர் தலைமையில் நடக்கிறது.
திண்டிவனம் ரயில் நிலையம் முதல் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் வரை புதுச்சேரி வழியாக சுமார் 65 கி.மீ. நீளத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்கு வருகின்ற ஆலோசனை கூட்டம் 23 ஆம் தேதி மாலை மூன்று மணிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் சி.பி ஆதித்யன் தலைமையில் நடக்கிறது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
இந்த திட்டத்தால் பயனடையும் அனைத்து பங்குதாரர்கள், பொருளாதார முனையங்கள், உற்பத்தியாளர்கள் பிற தொடர்புடைய தரப்பினருடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்துதல் சம்பந்தமாக சென்னை, பார்க் டவுன், தெற்கு ரயில்வே துறையின் துணை தலைமை அனுமதி கோரப்பட்டு தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, தெற்கு ரயில்வே துறையின் துணை தலைமை பொறியாளர் , கட்டுமானம் ரயில்வே வாரிய இதற்கு உத்தரவளித்துள்ளது திண்டிவனம் கடலூர் துறைமுகம் via பாண்டிச்சேரி (65கி.மீ.) புதிய ரயில் பாதை
அமைக்கும் திட்டம் செயல்படுத்தவுள்ள இடத்தை இறுதி செய்யப்படுகிறது,
சென்னை, தெற்கு ரயில்வே துறையின் துணை தலைமை பொறியாளர் ,கட்டுமானம் அவர்களின் கடிதத்தில் ரயில்வே வாரிய உத்திரவுகளின் படி, திண்டிவனம் கடலூர் துறைமுகம் via பாண்டிச்சேரி (65கி.மீ.) புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தவுள்ள ப இடத்தை இறுதி செய்யவும், திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யவும் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது
இது தொடர்பாக, மேற்படி திட்டம் உத்திசேதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், மேற்படி திட்டத்தால் பயனடையும் அனைத்து பங்குதாரர்கள், பொருளாதார முனையங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருடன் ஒரு கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பயன்படுத்தி மேற்படி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து, அதன் தேதியை அறிவிக்குமாறும், இதனால் திட்டமிடல் காலத்திலேயே பயனாளர்களின் கருத்தை கேட்பதுடன், அதனை மேற்படி திட்டத்தில் செயல்படுத்த இயலும் எனவும், விரைவில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டியும் பார்வையில் காணும் கடிதம் வரப்பெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரயில் நிலையம் முதல் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையம் வரை புதுச்சேரி வழியாக 65 கி.மீ. நீளத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்கள், வணிக சங்க
பிரதிநிதிகள், இரயில்வே பயணிகள் நல சங்க பிரதிநிதிகள், தொழில்துறையினர் மற்றும் பொது மக்கள் பிரதிநிதிகள் உடனான கருத்து கேட்பு கூட்டம்
23.04.2025 அன்று மாலை 03.00 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி கருத்து கேட்பு கூட்டத்திற்கு சம்மந்தப்பட்ட நபர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.