/indian-express-tamil/media/media_files/2025/03/31/dUC0AxNbLTDK5RtZJ6KP.jpg)
கடலூர் மாவட்டம் செம்மண்டலம் குண்டுசாலை பகுதியில் NHO ஆர்கானிக் ஷாப் என்ற பெயரில் அலுவலகம் வைத்து VESTIGE PRODUCT வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி விற்பனை செய்துவந்த கம்மியம்பேட்டையைச் சேர்ந்த செல்வநாயகம் (49), 2022 முதல் 2025 வரையான காலத்தில் NHO தீபாவளி, தங்க நாணயம் சிறுசேமிப்பு திட்டம், மாதாந்திர ஏலச்சீட்டு மற்றும் பிற சேமிப்பு திட்டங்கள் நடத்திவந்தார்,
கடலூர் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், புவனகிரி, பண்ருட்டி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் சுமார் ரூ.5 கோடிக்கு மேல் பணம் வசூல் செய்து அந்த பணத்தை ஆன்லைன் டிரேடிங்க மூலம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து வந்துள்ளார். செல்வநாயகத்திடம் பணம் கட்டிய நபர்களில் சுமார் 800-க்கும் மேற்பட்ட நபர்களுக்குண்டான மளிகைப்பொருட்கள், தங்க காயின் மற்றும் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு ஷேர்மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி அலுவலகத்தை பூட்டிவிட்டு தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
செல்வநாயகத்திடம் தீபாவளி சீட்டு மற்றும் மாதாந்திர ஏலச்சீட்டு கட்டிய அன்பரசு என்பவர் மூலம் சீட்டு கட்டிய நபர்களிடம் சுமார் ரூ.16 லட்சம், புவனகிரி அருள்குமார் என்பவர் மூலம் சீட்டு கட்டிய நபர்களிடம் ரூ.1,16,06,600/-யுடன் 63 கிராம் காயினும், புவனகிரி துரைசாமி என்பவர் மூலம் சீட்டு கட்டிய நபர்களுக்கு ரூ.60,93,500/-மும், சுடலூர் வண்டிபாளையம் வைத்தியலிங்கம் என்பவர் மூலம் சீட்டு கட்டிய நபர்களுக்கு ரூ.99,60,000/- யுடன் 15 கிராம் காயினும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும், பலநபர்களுக்கு பணத்தை தராமலும், அதற்கான பொருட்கள் கொடுக்காமலும் ஏமாற்றி விட்டதாகவும் புகாரளிக்கப்பட்டது.
அன்பரசு மற்றும் பாதிக்கப்பட்ட பல நபர்கள் சேர்ந்து செல்வநாயகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் புகார் கொடுத்த செல்வநாயகத்தின் மீது வழக்குப்பதிந்து, கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி காவல் உதவி ஆய்வாளர் மதி,
செல்வநாயகம் மீது 406, 420 வழக்குப்பதிவு செய்து செல்வநாயகத்தை கைது செய்தனர். விசாரணையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் தீபாவளி பண்டு மற்றும் தங்க நாணயம் சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் பணம் வசூல் செய்து ஏமாற்றியது தெரியவந்து உள்ளது. போலியான விளம்பரங்களை நம்பி பணத்தை கட்டி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us