Advertisment

விருத்தாசலம் அருகே தி.மு.க. பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு- 6 பேர் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் திமுக பிரமுகர் இளையராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில், 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

author-image
WebDesk
New Update
Cuddalore

Cuddalore Gun fire on DMK cadre

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.. தியாகராஜன். இவர் மகன் இளையராஜா (48) தி.மு..வில் இருக்கிறார்.

Advertisment

சமூக ஆர்வலரான இவர் விருத்தாச்சலத்தில் வள்ளலார் குடில் என்ற பெயரில் முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம் நடத்தி வருகிறார். இயற்கை விவசாயமும் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் சிலருக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் கோயில் அருகே உள்ள தனது விவசாய நிலத்துக்கு இளையராஜா வெள்ளிக்கிழமை சென்றார். அப்போது மாலை 5 மணியளவில், அங்கு மூன்று பைக்குகளில் அதே ஊரைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென வந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் இளையராஜாவை நோக்கி சுட்டனர்.

சுதாரித்துக் கொண்ட இளையராஜா, தன் காரில் ஏறி தப்பிக்க முயன்றார்.

ஆனால் விடாமல் விரட்டிய அந்த கும்பல், கார் கதவு, கண்ணாடி வழியாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் அவரின் இடுப்பு, கழுத்து, தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது.

இதையடுத்து காயங்களுடன் இளையராஜாவே காரை ஓட்டிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இளையராஜாவிடம் விசாரித்த போது, ’வேளாண் நிகழ்ச்சிக்காக, வேளாண் அலுவலருடன் எனது நிலத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது மணவாளநல்லுாரை சேர்ந்த ராஜசேகரன் மகன் ஆடலரசன் மற்றும் புகழேந்தி உள்ளிட்ட 6 பேர், 3 பைக்கில் வந்தனர்.

ஆலடரசன் இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார். சுதாரித்து கொண்ட நான் எனது காரில் ஏறி தப்பிக்க முயன்றேன். அப்போது ஆடலரசன் என் மீது துப்பாக்கியால் சுட்டார். மற்றொருவர் கையிலும் துப்பாக்கி இருந்தது. நான் கார் உள்ளே சென்று கார் கதவை மூடியதும், என்னை நோக்கி ஓடிவந்த ஒருவர் கார் கண்ணாடி வழியாக மீண்டும் என் மீது துப்பாக்கியால் சுட்டார். காரை வேகமாக ஓட்டி அவர்களிடம் இருந்து தப்பி நான் மருத்துவமனையில் சேர்ந்தேன், என்று வாக்குமூலம் அளித்தார்.

இந்நிலையில், இளையராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் , ஆடலரசு, புகழேந்தி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

மணவாளநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜசேகர் மகன் புகழேந்தி ராஜா (25). அதிமுக ஓ.பி.எஸ் அணியில் கடலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது சகோதரர் ஆடலரசு (22). இவர்களுக்கும், இளையராஜாவுக்கும் தேர்தல் முன் விரோதம் இருந்து வந்தததும், அதன் காரணமாகவே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Cuddalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment