விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே இந்த சுங்க சாவடி வழியே 50 முறை ஒரு தனியார் பேருந்து சென்று வந்தால் ரூ.14,090 கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டையில் அமைக்கப்படுள்ள சுங்க சாவடிக்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொத்தட்டை சுங்க சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொத்தட்டை சுங்க சாவடி வழியாக 50 முறை சென்று வந்தால் ரூ14,090 கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை முன்வைத்து கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் கொத்தட்டை சுங்க சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“