/indian-express-tamil/media/media_files/UkF4l3LA2Wq7cYoEfoki.jpg)
Cuddalore
கடலூர் மாவட்டத்தில் சொகுசு காரில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ளவரை தேடி வருகின்றனர்.
கடலூரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது.
இதன்பேரில், கடலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றனாய்வுத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் விழுப்புரம் சரகம் மனோகரன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் சந்தோஷ் சிறப்பு உதவியாளர் ஏழுமலை, சிறப்பு உதவியாளர் கண்ணன், தலைமை காவலர் முத்து குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விருதாச்சலம் தாலுக்கா புது கூறப்பேட்டை குமரன் மளிகை கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
/indian-express-tamil/media/media_files/GFetHBwEJCuHM3WPJQOd.jpeg)
அப்போது அந்த வழியாக வந்த TN 12 AZ 8635 மகேந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்கப் என்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், வாகனத்தில் 1300 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் ஆனந்த் (27), பிரவீன் குமார் (27) இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், விருதாச்சலம் புது கூறப்பேட்டை, பொன்னேரி ஆகிய கிராமங்களில் இருந்து பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, விளாங்காட்டூர் தனுசுராஜ் என்பவரிடம் கொடுப்பதாகவும், அவர் அதை வாங்கிக் கொண்டு கோழிப் பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்து வந்தது தெரியவந்தது.
/indian-express-tamil/media/media_files/vyrW0RP6hI3tPD3FA2t3.jpeg)
மேற்கண்ட இருவரும் இன்று காலை கைது செய்து கடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவான தனுஷ் ராஜ் என்பவரை கைது செய்ய தகவல் வைத்து தேடி வருகின்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் கடலூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us