கடலூர் அருகே ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு: 70 பேருக்கு வாந்தி-மயக்கம்; மக்கள் போராட்டம்

சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த அப்பகுதி மக்கள், காற்று மண்டலத்தில் வாயு பரவி இருப்பதை உணர்ந்தனர். சிலருக்கு வாந்தி, மயக்கம், மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.

சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த அப்பகுதி மக்கள், காற்று மண்டலத்தில் வாயு பரவி இருப்பதை உணர்ந்தனர். சிலருக்கு வாந்தி, மயக்கம், மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
cuddalore

cuddalore

கடலூர் சிப்காட்  கிரிம்சன் ஆர்கானிக்  ராசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டதால், அப்பகுதியைச் சேர்ந்த 70 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் அருகே உள்ள சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் 40க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இன்று காலை கிரிம்சன் ஆர்கானிக்  ராசாயன தொழிற்சாலையில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, வாயு கசிந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

Advertisment

WhatsApp Image 2025-09-06 at 2.31.53 PM

சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த அப்பகுதி மக்கள், காற்று மண்டலத்தில் வாயு பரவி இருப்பதை உணர்ந்தனர். சிலருக்கு வாந்தி, மயக்கம், மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணி, இரண்டு சிறுவர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் அலுவலகம் மற்றும் காவலாளி அறையை அடித்து நொறுக்கினர். பின்னர், கடலூர்-சிதம்பரம் சாலைக்குச் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

WhatsApp Image 2025-09-06 at 2.31.51 PM

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடலூர் எஸ்.பி. ஜெயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இருப்பினும், ஆத்திரம் தீராத பொதுமக்கள், தொழிற்சாலையை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

போலீசார் தொழிற்சாலைக்குள் சென்று ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், தொழிற்சாலையில் உள்ள பாய்லருக்கு செல்லும் குழாயில் இருந்த 'கேஸ்கட்' திடீரென உடைந்ததால் வாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபு ராஜேந்திரன், கடலூர

Cuddalore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: