கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஆளில்லா ரயில்வே கேட்டை பள்ளி வாகனம் கடக்க முயன்றபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வேன் அப்பளம் போல் நொறுங்கி உள்ளது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/08/accident-school1-2025-07-08-10-03-23.jpg)
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், கேட் கீப்பரில் அலச்சியத்தால் தான் ரயில் – பள்ளி வேன் மோதி விபத்து நடந்தது என்று விபத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளார். ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால், பள்ளி வேன் கடந்து சென்றபோது விபத்து ஏற்பட்டது. கேட் கீப்பர் அலச்சியமே இந்த விபத்துக்கு காரணம் என்று விபத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளார். செம்மங்குப்பம் ரயில்வே கேட் மூடப்படாததால், விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/08/accident-school-2025-07-08-10-03-23.jpg)
மேலும், இந்த விபத்து காரணமாக முக்கிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து தாம்பரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/08/accident-school2-2025-07-08-10-03-23.jpg)
இந்த விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே துறை விளக்கம் இன்று காலை சுமார் 07.45 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது. கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது வேன் ஓட்டுநர் வேனை வேகமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட், கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்துள்ளார் என்று கூறியுள்ளது. ஆளில்லாத ரயில்வே கேட் மூடப்படாததால் வேன் உள்ளே நுழைந்ததாக முதலில் மக்கள் குறிப்பிட்ட நிலையில் இந்த தகவலுக்கு ரயில்வே துறை மறுப்பு தெரிவித்துள்ளது,