/indian-express-tamil/media/media_files/2025/01/19/uGQBk50IKeEGVBGHZ22X.jpg)
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை சென்றார். அப்போது அங்குள்ள யாழ்ப்பாணம் நகரில் 11 மில்லியன் டாலர் மதிப்பில் கலாச்சார மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த கலாச்சார மையத்தை 2023, பிப்ரவரி மாதம் அப்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இதனிடையே இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு தற்போது திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை "திருவள்ளுவர் கலாச்சார மையம்" என பெயர் மாற்றம் செய்ததற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாச்சார மையத்தை "திருவள்ளுவர் கலாச்சார மையம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துவதோடு, பிரதமர் நரேந்திர மோடியின், உலகில் பழமையான மொழி மற்றும் கலாச்சாரமான தமிழின் பெருமையைப் பரப்புவதற்கான தொடர்ச்சியான பணியில் மற்றொரு மைல்கல் ஆகும்.
தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாசார மையத்தை "திருவள்ளுவர் கலாசார மையம்" என்று மறுபெயரிட்டிருப்பது, உலகம் முழுவதும் பழம்பெரும் வாழும் மொழி மற்றும் கலாசாரமான தமிழின் பெருமையைப்… https://t.co/x2Xhd3EhFc
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 19, 2025
இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான கலாச்சார மற்றும் நாகரிக தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.